இதுதான் சூர்யாவின் மாஸ் படக்கதை
வெங்கட்பிரபுவும் சூர்யாவும் கூட பேய் கதைகளை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஊரோடு ஒத்து வாழ், பேயோடு பொருந்தி வாழ், ஆவியோடு அலைந்து வாழ், ட்ரெண்டோடு சேர்ந்து வாழ் என்று இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்களை வைத்துக் கொள்ளலாம். அடுத்து அவர்கள் இணைந்து தரவிருக்கும் படம் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். இதை வெங்கட் பிரபுவும் உறுதி செய்திருக்கிறார். இதற்கிடையில் இந்த படத்தின் கதை என்ன?
அச்சு அசலாக தெரியாவிட்டாலும், மிச்சசொச்சமாக தெரிந்திருக்கிறது. அதுதான் இங்கே ஏழெட்டு வரிகளில்.
சூர்யா எங்கு போனாலும் அவரை சிலர் பின் தொடர்கிறார்கள். கடுப்பாகிற சூர்யா, அவர்களிடம் ‘நீங்கள்லாம் யாரு? ஏன் என்னை ஃபாலோ பண்றீங்க ?’ என்று கேட்டாலும் நோ பதில். ஒரு கட்டத்தில் எரிச்சலாகும் அவர், தன் நண்பர்களிடம் சொல்லி இந்த மாதிரி என்னை சிலர் பின் தொடர்ந்து வர்றாங்க. ஏன்னு கேட்டா காரணம் சொல்ல மாட்டேங்கிறாங்க. நீங்களாவது கேளுங்க. என்று கூற, அவர்கள் சரி காட்டு என்று கூட வருகிறார்கள். சூர்யாவும் அவர்களை காட்டுகிறார். என்ன ஆச்சர்யம்? சூர்யா கண்களுக்கு மட்டும் தெரிகிற அவர்கள் மற்றவர்களுக்கு தெரியவில்லை. ‘யாருமே இல்லையே?’ என்று இவர்கள் கூற, ‘அதோ அங்கதான் நிக்கிறாங்க’ என்று சூர்யா கூற, விஷயம் புரிகிறது.
சூர்யாவுக்கு என்னவோ ஆயிருச்சு என்று கலைகிறது நண்பர்கள் கூட்டம். ஆனால் சூர்யா பின்தொடரும் அவர்களிடம், ‘என்னதான் வேணும்’ என்று நட்பாகிறார். எல்லாருமே ஏதோவொரு பிரச்சனையால் சாந்தியடையாத ஆத்மாக்கள். அவர்கள் தங்கள் பிரச்சனையை சொல்ல ஒவ்வொரு பிரச்சனையாக சால்வ் செய்கிறார் சூர்யா. அதற்கப்புறம் எல்லாரும் மேலே போய்விட சுபம்!
கேட்க நல்லாயிருக்கு. பார்க்கவும் நல்லாயிருக்கிற மாதிரி எடுங்க வெங்கட்! அஞ்சான் ஜுரத்திலிருந்து சூர்யாவை மீட்டாக வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கு!
sir ithu suntv sunday serial kathai
ஹலோ கோஸ்ட் அப்படின்னு ஒரு கொரியன் படம் பலமுறை பார்த்திருக்கிறேன் யூடியுபில் கூட இருக்கு.. (மை சாஸி கேர்ள் பட ஹீரோ)
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தது.. அதே கதைதான்.. கடைசியில் சாந்தி அடையாத ஆத்மாக்கள் எல்லாம் அவனுடைய அப்பா அம்மா சொந்தங்கள்..
ச்சே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கொரிய காரனுக காப்பி அடிச்சிட்டாணுக என்னமோ போங்க.. !!