நாற்பது வயசாச்சு… அதனால? இயக்குனரை அலற விட்ட விஜய்!
சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீதான் அந்த அதிர்ஷ்டசாலி. ஒரு படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தின் கதை மற்றும் இயக்குனரை தேர்வு செய்துவிடுவது விஜய்யின் ஸ்டைல். (ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு. ஃபினிஷிங்லதான் யாராவது கட்டைய போட்டுர்றாங்க) அப்படிதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அட்லீ. அவர் சொன்ன ஒன் லைன் ரொம்பவே பிடித்துவிட்டது விஜய்க்கு. அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்று கூறிவிட்டார் விஜய்.
இதற்காக சென்னையிலிருக்கும் இரண்டு டாப்போ டாப் நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். வேறொன்றுமில்லை, விஜய் படத்தை அவர்கள் தயாரிப்பதாகதான் திட்டம். இந்த கதை விவாதத்திற்கு மட்டும் நெருக்கி நெருக்கி முக்கால் கோடியை செலவு வைத்துவிட்டாராம்அட்லீ. இப்போது முழு ஸ்கிரீன் பிளேயையும் கேட்ட விஜய், எனக்கு நாற்பது வயசாயிருச்சு. ‘பூவே உனக்காக’ மாதிரி இப்ப போய் பிழிய பிழிய காதல் பண்ணிட்டு இருக்க முடியாது. ஆக்ஷன் பேஸ்டு கதைதான் எனக்கு சரிப்படும். அதனால் காதலை குறைச்சுட்டு ஆக்ஷனுக்கு ஹோப் கொடுங்க. மீண்டும் கதையை சரி பண்ணிட்டு வாங்க என்று கூறிவிட்டார்.
இவ்வளவும் நடந்த பின்பு இப்போது படத்தை எடுப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளானதாம் ஃபாக்ஸ் ஸ்டார். அதற்கெல்லாம் அஞ்சாத விஜய், படத்தை தாணுவிடம் ஒப்படைத்துவிட்டார். இனி அட்லீ ரெடியாகி வரும்போது தாணு தயாராக இருப்பார்.
என்னே ஒரு ப்ளான்?!