போதும்யா உங்க நட்பு! அண்டை மாநிலத்தில் தஞ்சமான அனிருத்?

சுதந்திரமா ஒரு கெட்ட வார்த்தை பேச முடியல. பேசுன வார்த்தைக்கு ட்யூன் போட்டு பாடுனா, போலீஸ்ல கம்ளைண்ட் கொடுக்குறானுங்க. தப்பிச்சு ஓடுனா ஜெயில் கைதி போல பார்க்குறானுங்க. அங்க சேர்ந்தா குத்தம். இங்க சேர்ந்தா வருத்தம்னு இவனுங்களை நினைச்சு நினைச்சு வாழ வேண்டியிருக்கே என்று நினைத்திருக்கலாம். இப்போதெல்லாம் பென்சில் பாய் அனிருத் சென்னையிலேயே இருப்பதில்லை.

அடிககடி ஹைதரபாத் பறந்துவிடுகிறார். அங்கு தனக்கு பிடித்தமான இடத்தில் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரை தன் வசமாக்கிக் கொண்டாராம். அங்குதான் கம்போசிங். அங்குதான் ரீ ரெக்கார்டிங், அங்குதான் அரட்டை, அங்குதான் குறட்டை என்று அவரும் ஐதராபாத்தும் ஐஸ்சும் கோனும் போலாகிவிட்டார்கள்.

சரி அவருக்கு பிடித்த இடம். பிடித்த லொக்கேஷனில் ட்யூன் போட்டால் இன்னும் நன்றாகதானே இருக்கும்? அங்குதான் எரிச்சலே. இப்படி எட்டாத ஊரில் உட்கார்ந்து கொள்கிற அனிருத்தை எப்படி அணுகுவது? எப்படி அட்வான்ஸ் கொடுப்பது என்று ஒரு கூட்டம் திகைத்தாலும், கொடுத்த வாய்ப்புக்கே அவர் பின்னால் தொங்க வேண்டியிருக்கு. இப்போ வேறு ஏரியாவுல போய் தங்கிட்டா, எங்கே போய் தேடி எங்களுடைய விருப்ப வெறுப்புகளை பகிர்வது? இதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் மண்டையிடி!

கொசுவை பிடிக்க கோணியோடு கிளம்பிய கதையாகதான் இருக்கு! ஹ்ம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவசரப்பட்டு கருத்து? அப்புறமா பொக்கே! தடதடக்கும் நடிகர்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள்....

Close