தெரியாம நடந்திருச்சு மன்னிச்சிருங்க… ஏ.ஆர்.முருகதாஸ் அப்பாலஜி!

கோவை ஈரோடு பகுதிகளில் வெளிவரும் முக்கியமான தமிழ் நாளேடு ‘காலைக்கதிர்’. இந்த நாளிதழ் மீது ஏ.ஆர்.முருகதாசுக்கு கடந்த சில வருடங்களாகவே ‘கசப்போபியா!’ காரணம்? ‘ஏழாம் அறிவு’ படப்பிடிப்பு சமயத்தில் இவர்கள் போட்ட செட் ஒன்றின் காரணமாக எங்கோ ஒரு நீர்நிலையில் மாசு ஏற்பட்டதாம். அதை சுட்டிக்காட்டியிருந்தது அந்த நாளேடு. அதற்கப்புறம் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி, நாலைந்து நாட்கள் ஒரே அலைச்சல் முருகருக்கு. அன்றிலிருந்தே காலைக்கதிரின் கழுத்தறுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார் போல. பொருத்தமாக அமைந்தது கத்தி.

படத்தில் ஒரு காட்சியில் ‘காலைக்கதிர்’ அலுவலகம் காட்டப்படுகிறது. அவரிடம் விவசாயிகள் தண்ணீர் பிரச்சனையை எடுத்துச் செல்கிறார்கள். அங்கிருக்கும் பத்திரிகை ஆசிரியர், ‘இதெல்லாம் ஒரு மேட்டரா? யாராவது யாரையாவது கற்பழிச்சிட்டாங்க, அல்லது யாராவது யார் கூடயாவது ஓடிட்டாங்க என்பது மாதிரி சுவாரஸ்யமான சம்பவங்களா சொல்லுங்கய்யா. அதைவிட்டுட்டு…’ என்று பதிலளிப்பார்.

இதை கண்டு வெகுண்டெழுந்த அந்த நாளிதழின் நிருபர் ஒருவர் பிரச்சனையை அலுவலக தலைமைக்கு கொண்டு சென்றார். அதற்கப்புறம் அவரே முருகதாசிடம் பேசினார். அப்போது அவரிடம் பதிலளித்த முருகதாஸ், அன்றைக்கு நான் ஷுட்டிங்குக்கே போகல. வேற ஒருத்தர்தான் அந்த காட்சியை ஷுட்டிங் பண்ணினார். (அட… இது வேறயா?) எனக்கு அப்படியொரு பெயர்ல நாளிதழ் வருதுண்ணே தெரியாது. எந்த பத்திரிகை பெயரும் வந்துராம பார்த்துங்கன்னுதான் சொன்னேன். (யாருகிட்ட? அப்ப டைரக்டர் யாரு நீங்களா? அல்லது நீங்க சொன்னதா சொன்னீங்களே அவரா?) எப்படியோ தப்பு நடந்திருச்சு. ஸாரி’ என்றாராம்.

பத்திரிகை நிர்வாகம் பெருந்தன்மையோடு விட்டுவிட்டது முருகதாசை!

Read previous post:
அதென்ன ஓவினாம் தற்காப்புக் கலை?

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர்...

Close