ஓங்கி அடிச்சா எத்தனை டன்னு? அருண் விஜய் அதிரடி!
அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக் டக்கென படிகளில் ஏறி ஓடி தமிழ், தெலுங்கு மொழிகளில் முக்கிய நடிகர் ஆகிவிட்டார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடையற தாக்க, அருண்விஜய்யின் பாய்ச்சல்களில் ஒரு முக்கியமான படம். கவுதம் மேனன் தயவில் என்னை அறிந்தால் படத்தில் அவர் செய்த வில்லன் வேடத்திற்கு அஜீத் ரசிகர்களே ஆஹா போட்டார்கள்.
அதற்கப்புறமும் அவரது சொந்தப் படமான வா டீல் படத்தை வாங்க ஆள் இல்லை. (இதைதான் துரதிருஷ்டம் என்கிறான் மிஸ்டர் குடுகுடுப்பை) பொறுத்து பொறுத்து பார்த்தவர், ஜுன் மாதம் சொந்த முயற்சியிலேயே ரிலீஸ் செய்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். இந்த நிலையில்தான் அருண்விஜய்யின் வலது கை முண்டாவை வலுப்படுத்துகிறது இன்னொரு செய்தி.
ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இன்று அப்படத்தின் ஆபிஸ் பூஜை போடப்பட்டுள்ளதாம். இதில் அவருக்கு பரபர ‘சிங்கம்’ டைப்பான போலீஸ் கேரக்டராம். அருண்விஜய்யின் உடல்வாகுக்கு ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுக்கும் மேலதான்.
அடிங்க அருண். அதிரட்டும் இன்டஸ்ட்ரி…