அரவிந்த்சாமி வேணாம்! அஜீத் கறார்?
“நமக்கெதுக்கு நடிப்பு? ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. அதை கவனிக்கவே நேரம் இல்ல. இதுல இது வேறயா?” என்று அரவிந்த்சாமி ஒதுங்க ஒதுங்க, ஓவராக பிடித்து இழுக்கிறது சினிமா. ஒருவேளை இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தால்தான் கேட்ட சம்பளத்தை குறைக்காமல் கொடுப்பாங்க என்று நினைத்திருக்கலாம். அரவிந்தின் அலட்டல், இன்னும் இன்னும் என்று விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.
அப்படியும் தனி ஒருவன் படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார் அவர். இந்த நிலையில்தான் அஜீத்துடன் இணையும் படத்தில் அரவிந்தசாமியை வில்லனாக நடிக்கக் கேட்கலாம் என்று நினைத்தாராம் சிவா. படத்தில் அஜீத்துடன் மோதுவதற்கு மிக பொருத்தமான வில்லனை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரவிந்த் பொறுத்தமாக இருப்பார் என்பது சிவாவின் நம்பிக்கை.
காஸ்டிங் விஷயத்தில் அஜீத்தின் விருப்பமும் மிக முக்கியமாச்சே? ஆனால் அவரோ, “அரவிந்த்சாமியா? வேணாமே” என்கிறாராம். அஜீத்தே சொல்லிவிட்ட பின் ஆட்சேபணை ஏது? தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் புகழ் பெற்ற முன்னாள் கதாநாயகர்களுக்கு வலை விரித்திருக்கிறார் சிவா.
யார் சிக்கப் போகிறார்களோ?