நீங்க சிலுக்கு மாதிரியே இருக்கீங்க… பிந்து மாதவியிடம் வழிந்த காமெடி நடிகர்

‘லிரிக் என்ஜினியர்’ என்று சும்மாவா சொன்னார்கள் மதன் கார்க்கியை. கத்துகிட்ட மொத்த படிப்பையும் இப்போதெல்லாம் தான் எழுதுகிற பாடல்களில்தான் இறக்கி வைக்கிறார் மனுஷன். ‘நாங்கள்லாம் படிச்சது வேற. செய்யுற தொழில் வேற. ஆனால் மதன்கார்க்கிதான் அதை சரியா செய்யுறாரு’ என்று காமெடி நடிகர் சதிஷ் பாராட்ட, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அப்படியொரு பாடலை எழுதியிருக்கிறார் மதன்கார்க்கி.

அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்!
தலை எழுத்தை மாற்றவே – உன்
மூளையை நீ அழுத்தவும்!

வேகத்தை எடுக்க
முடுக்கியை அழுத்து!
நியாயத்தை உரைக்க
சொற்களை அழுத்து!

என்று போகிறது அந்த பாடல். அட்டக்கத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா என்று முக்கியமானவங்களிலேயே மூன்றாமிடத்தில் இருப்பவர்களை வைத்து இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் ராம்பிரகாஷ் ராயப்பா. ‘திடீர்னு ஒரு நாள் செல்போன் சேவையெல்லாம் நிறுத்தப்பட்டால் என்னாகும்’ என்பதுதான் படத்தின் கான்சப்ட்! நகுல் இளம் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். அதாவது கண்ணில் கிடைக்கிற பொருட்கள் எல்லாம் அவருக்கு ஏதோ ஒரு விஞ்ஞான பொருளாகவே தெரிகிறது. அதை வைத்து ஏதேதோ ஜிம்மிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவரை ஐஸ்வர்யா தத்தா காதலிப்பதை போல சில காட்சிகளை நமக்கு காட்டினார்கள். என்னவோ இருக்குப்பா என்கிற நம்பிக்கையை காட்சிகள் கொடுத்த அதே நேரத்தில், தில்லான ஒரு விஷயத்தை கையில் எடுக்கிறார்கள் என்றும் புரிந்து போனது.

கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும், இது தமன் ஜாதி மியூசிக் என்று தெரிந்துவிடும். நன்றாக ஒருவரை பாடவிட்டு, அதை கம்ப்யூட்டரில் போட்டு அந்த குரலின் இடுப்பில் கிள்ளி வைப்பது அவரது ஸ்டைல். இந்த படத்திலும் அதுபோன்ற ஸ்டைலில் சில பாடல்கள் இருக்கின்றன.

‘நீங்க சிலுக்கு மாதிரியே இருக்கீங்க…’ என்று பிந்து மாதவியை பார்த்து படத்தின் காமெடியன் சதீஷ் சொன்னதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை பிந்து. இதுபோல எத்தனை வழிசல்களை பார்த்தாரோ?!

‘நகுல் எப்ப கூப்பிட்டாலும், எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வந்து நடிச்சு கொடுத்துட்டு போற அளவுக்கு ரொம்ப ரொம்ப ஈஸி ஹேண்டிலிங்கா இருந்தார்’ என்று பாராட்டினார் டைரக்டர் ராம்பிரகாஷ் ராயப்பா. இந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு அப்படியே தொடரணும் என்பதுதான் எங்களோட ஆசையும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாய்கள் ஜாக்கிரதை- விமர்சனம்

பாம்பு டைப் அடிக்கிறதையே பார்த்தாச்சு! நாய் சைட் அடிக்கிறதையும் ரசிச்சுருவோமே என்று உட்கார்ந்தாலொழிய நாயின் அற்புதங்கள் எதுவும் நம்மை உசுப்பேற்றவில்லை என்பதை இந்த படத்தின் முதல் தகவல்...

Close