இவரு பண்ணிய வேலைக்கு அஜீத் வேணுமாம்ல?

‘பொன்முட்டையிட்ட வாத்துதான். போதும்டா சாமீ.. கதவை சாத்து’ என்கிற நிலைமைக்கு ஆளாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் ஃபுல் மூடுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கும்பல் கும்பலாக இளசுகள் குவிந்து கலெக்ஷனை வாரியிறைத்துக் கொண்டிருந்தாலும், ஜி.வி.பிரகாஷ் இனி இந்த டைப் படங்களுக்கு நோ சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இவருக்கு எப்படி வாய்ப்புகள் வந்து கதவை தட்டி கடுப்பை கிளப்புகிறதோ, அதைவிட பலமாக அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வீட்டு கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்படி வந்த ஒரு வாய்ப்புதான் இது. “நீங்க கேட்கிற சம்பளம், நீங்க கேட்கிற பட்ஜெட். இதே மாதிரி ஒரு வளரும் ஹீரோவை வச்சுகிட்டு இதே டைப்ல ஒரு படத்தை எடுத்துக் கொடுங்க” என்று ஆதிக் ரவிச்சந்திரனை அணுகினாராம் அவர். தன்னிடம் தயாரிப்பாளரை அழைத்து வந்த அந்த நபர் சாதாரண ஆளில்லை. அஜீத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதை புரிந்து கொண்ட ஆதிக், “நீங்க நினைச்சா அஜீத் சார்ட்ட கால்ஷீட் வாங்கித்தர முடியும். கொஞ்சம் பேசிப் பாருங்களேன். இந்த படத்தை அவருக்கே பண்ணுவோம்” என்று கேட்க, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தெறித்து ஓடி விட்டாராம் அவர்.

என்னத்தை தப்பா கேட்டுட்டேன், இப்படி தலை தெறிச்சு ஓடுறாரு?ன்னு ஆதிக் கேட்ட கேள்விக்கு அழுத்தம் திருத்தமா யாரு பதில் சொல்றது?

Read previous post:
புலி- உதவிய உள்ளங்களுக்கு விஜய் தனித்தனியாக நன்றி!

புலி படத்தின் கடைசி நேர சிக்கலையும், சிரமத்தையும் எழுதினால் அம்மிக்கல் அழும்! ஆட்டுரலும் தேம்பும்! கிடைக்கிற இடத்திலெல்லாம் கிடுக்கிப்பிடி போட்ட வருமானவரித்துறையின் செயலால், படத்தை ரிலீஸ் செய்ய...

Close