Gapடன்?
மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்? “என்னாலதான் அதிமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூசாமல் நம்பியும் பேசியும் வந்த விஜயகாந்த்தை இந்த எலக்ஷன் ஒழித்தே கட்டிவிட்டது. “என் செருப்பை காணல… அதை அந்த யானைதான் திருடியிருக்கும்னு நினைக்கிறேன்” என்று ஒரு எறும்பு புலம்பியதாக ஒரு கதையை படித்திருப்போம். அந்த கதைதான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் கூட தேறவில்லை அவருக்கு. அந்த வகையில் இந்த தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்தான். இனி ஜென்மத்திற்கும் எழ முடியாது அவரால்.
ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன, அலட்டிய அலட்டல் என்ன… கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் பகீரென்கிறது. அதுவும் பத்திரிகையாளர்களை அவர் நடத்திய விதம், சாதிக் கட்சிகளில் பதவியிலிருக்கும் நாலாந்திர வட்டச் செயலாளர் கூட செய்ய துணியாத விஷயம். ‘சேரை தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ’ என்பதில் ஆரம்பித்து, ‘டேய்… போய் ஜெயலலிதாவை கேள்றா’ என்று கொந்தளித்து, நட்டு நடு வெயிலில் தன் கட்சி ஆபிஸ் வாசலில் நின்ற செய்தியாளர்களுக்கு கொஞ்சம் நிழல் கொடுக்கக் கூட மனம் வராத அளவுக்கு தள்ளியது அவரை. சாலிகிராமம் வீதியில் சில பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டியது அவரது கட்சிக்கும்பல். “பத்திரிகைகாரனுங்க வீட்ல புகுந்து அடிப்பேன்” என்றார் அவர் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர்.
“அங்க யார்றா பேசிகிட்டு இருக்கறது. அவனை தூக்கி வெளியில வீசு…” இது பொதுக்கூட்டத்தில் அன்றாடம் அவர் பேசும் டயலாக். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு ‘நாங்க உங்க மேல் வச்சுருக்கிற மரியாதை இதுதான்’ என்று காட்டிய மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருப்பதாக ஒப்பு கொண்டேயாக வேண்டும். நல்லது… இனி விஜயகாந்த்?
வாக்கு வங்கி பெருமளவு சரிந்துவிட்டது. இனி முன்பு போல ஒரு கட்சியும் அவர் வீட்டு வாசலில் தவம் கிடக்காது. கட்சியை புதுப்பிக்க வேண்டுமோ, இல்லையோ. முதலில் அவரை புதுப்பித்தாக வேண்டும். அதற்காக மீண்டும் படங்களில் நடிக்க கிளம்பிவிட்டாராம். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழன் என்று சொல்லடா’ படப்பிடிப்பில் இருப்பதாக ஒரு பதிவை போட்டிருக்கிறார் அவர்.
தமிழன்தான் நல்…..ல்லா சொல்லிட்டானே?
குடிகார நாதாரி கதை முடிந்தது. இனி ஆந்திராவிற்கு ஓட வேண்டியது தான்.
antha “thoo” inga viluntha thoo thaana 🙂