அதிமுக வெற்றி! இனி அஜீத் படம் ஜாம் ஜாம்…
கடிகாரத்தை தின்று விட்டு காலண்டரை விரித்துதான் தூங்கும் கொக்கு! ஏன்? உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கணுமா வேணாமா? அதனால்தான்..
அப்படியொரு கொக்காக காத்திருந்தார் அஜீத் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அஜீத் நடித்து விரைவில் துவங்குவதாக சொல்லப்பட்டிருக்கும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ந் தேதி துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் என்று நாட்களை கடத்தி வந்தார் அவர். இன்னொரு பக்கம் கதையில் அவருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. அதனால்தான் இப்படி என்றும் கூறப்பட்டது. நிஜத்தில் நடந்ததே வேறு என்கிறது திரையுலகம்.
சத்யஜோதி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவிருப்பது அதிமுக வுக்கு வேண்டப்பட்ட நிறுவனம் ஒன்றுதானாம். தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றால், முழு சந்தோஷத்தோடு படத்தை ஆரம்பிக்கலாம். அதுவரை பொறுங்க என்று சொல்லப்பட்டிருந்ததாம். இப்போது லைன் க்ளியர். தடபுடலாக படத்தை துவங்க வேண்டியதுதான்.
ஆக மொத்தம் அதிமுக வின் வெற்றி அஜீத்திற்கு சந்தோஷம் தந்திருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா?