ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாய்ய்ய்ய்ய்ங்கய்யா!

‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா?, பொதுநலப் புகையா? என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது.

திடீரென விஷாலை விஷால் ரெட்டி என்று ராதிகா அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலை தளங்களில் ராதிகா அப்படி பேசியிருக்கக் கூடாது என்று புகைகிறார்கள் ரசிகர்கள். இது ஒருபுறமிருக்க மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, “ஒருவேளை ரஜினி எங்க அணியில் இருந்திருந்தால் அவரை மராட்டி சிவாஜின்னு சொல்லுவாரா ராதிகா?” என்று கேட்க, ஒருவரிடத்திலும் இதற்கு பதிலில்லை.

இந்த நேரத்தில் சந்துல முளைத்த லெட்டர் பேட் ஆசாமிகள் சிலர் திடீரென போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். (அச்சாபீசுக்கு காசு கொடுத்துட்டீங்களா கண்ணுங்களா?) தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற பெயரில் இயங்கி வருகிற அந்த அமைப்பு(?) எங்காவது போய் கல்வெட்டை தோண்டி கடமை ஆற்றுகிற வேலையை விட்டுவிட்டு நடிகர் சங்கத்தில் தமிழர் போட்டியிட வேண்டுமா, தமிழரல்லவாதவர் போட்டியிடல் ஆகாதா என்பது குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறது. தமிழரல்லாதவர் போட்டியிடுவதை எதிர்த்து போராட்டம் வேறு நடத்தப் போகிறார்களாம். பேசாம விஷால் வீட்டை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்புற போராட்டம் ஒண்ணு ஆரம்பிங்களேன். அவரை வீட்டை விட்டு வெளியில் வர விட்டால்தானே தமிழ் படங்களில் நடிப்பார்?

இது ஒருபுறமிருக்க, “நம்ம வம்பு சண்டையில சி.எம்மை எதுக்கு இழுக்குறீங்க? நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை. இல்லாத ஒரு விஷயத்தை கிளப்பி விடாதீங்க” என்று தெளிவாக கூறிய பின்பும், முதல்வரை மதிக்காமல் பேசியுள்ள விஷாலை கண்டிக்கிறோம் என்றொரு போஸ்டர் முளைத்துவிட்டது. அதாவது முதல்வரே சமரசம் செய்து கொள்ள சொன்னாலும் கேட்கப்போவதில்லை என்று அவர் கூறியதாக ஒரு தகவலை கிளப்பிவிட்டு விட்டது ஒரு கோஷ்டி.

இவிங்ய்ங்க மத்தியில நிம்மதியா மூச்சு விடறதே சிரமம் போலிருக்கே! இந்த விசாலு தம்பி எப்படிதான் காலம் தள்ளப் போவுதோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மனோரமா ஒரு நெடிய கலைப் பயணம்!

நீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள்? கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா?...

Close