மன வருத்தத்தால் இறந்தாரா மனோரமா?
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய் பட்டிருந்த நடிகை மனோரமா, அண்மைக்காலமாக வேறு ஒரு சுமையையும் மனதில் ஏற்றிக் கொண்டு தத்தளித்து வந்தாராம். அதுதான் நடிகர் சங்க விவகாரம். நடிப்பே மூச்சு என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே நடிகர் சங்க வேற்றுமை குறித்து மனம் குமைய முடியும். மனோரமாவுக்கும் அப்படியொரு மனக் குமைச்சல் வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்க முடியாது.
கடந்த வாரம் சரத்குமார் அணியினர் தன்னை சந்திக்க வந்தபோது வெளியிடப்பட்ட போட்டோ ஒன்று மனோரமாவை நேசிக்கும் அத்தனை பேருக்கும் ஆறுதலாக இருந்தது. சிலர் வாய்விட்டே ஆச்சர்யப்பட்டார்கள். “இந்தம்மாவை மீடியாவும் வதந்தியும் பல முறை கொன்னுருக்கு. அப்படியிருந்தும் குத்து கல்லாட்டம் போஸ் கொடுக்கிறாரே…” என்று அவர்கள் ஆச்சர்யப்பட, அடுத்தடுத்த வாரத்திலேயே அவர் மரணம்.
சரத்குமார் தலைமையில் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், நமக்குள்ள இப்படியொரு சண்டை சச்சரவு அவசியம்தானா என்று மனம் வெதும்பினாராம் மனோரமா. அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்பும் சில நாட்களாக அது பற்றியே பேசியும் புலம்பியும் வந்தாராம். இந்த விவகாரம் அவர் மனதை வாட்டாமலிருந்தால் இன்னும் கொஞ்ச காலம் கூட அவரால் உயிரோடு இருந்திருக்க முடியும் என்கிறார்கள் கடைசி காலத்தில் அவரோடு இருந்தவர்கள்.
அவரது மறைவுக்கு பின் வெளியூர்களில் பிரச்சாரத்திலிருந்த விஷால் அணியினர் ஓடோடி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் அணியினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் திரளாக வந்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
நாமதான் ஆச்சியை கொன்னுட்டோம் என்கிற வருத்தம் பிரிந்து கிடக்கும் நடிகர், நடிகைகளின் மனசை அரித்துக் கொண்டேயிருக்கும். அதில் சந்தேகமில்லை.
sooparaa koluthup podunga.