டி.ராஜேந்தர் பாடலுக்கு உஸ்பெகிஸ்தானிலிருந்து ஒரு லைக்! போலிகள் கமிங்… தயாரிப்பாளர்களே உஷார்!

ட்விட்டர், பேஸ்புக் காலம் இது. ஆனால் அதன் சூட்சும சுக துக்கங்கள் தெரியாமலேயே பணத்தை வாரியிறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில அப்பாவி தயாரிப்பாளர்கள். இதில் தண்ணியை வடிகட்டி வெண்ணை எடுக்கும் பலே பலே தயாரிப்பாளர்களும் அடக்கம். வேறொன்றுமில்லை… “என்னை ட்விட்டரில் ரெண்டு லட்சம் பேர் பாலோ பண்றாங்க. நான் ஒரு வரி எழுதினா உங்க படம் அம்போதான். என்ன சொல்றீங்க?” என்று கிளம்பியிருக்கிறது ஒரு கோஷ்டி. “பேஸ்புக்ல எனக்கு இவ்வளவு லட்சம் லைக்ஸ் இருக்கு. ஒரு வரி போட்டா அவ்வளவுதான். எகிறிடும்” என்றெல்லாம் அளக்கும் மேற்படி கும்பலுக்கு உயிர் பொருள் ஆவியை அடகு வைத்து கொட்டிக் கொடுக்க தயாராகிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த லைக்ஸ்கள் எல்லாம் போலி லைக்ஸ்கள் என்பது புரியாமலே அவர்கள் குப்புற கவிழ்வதுதான் வேடிக்கை. ட்விட்டர் பேஸ்புக் நிறுவனமே ஒரு வெயிட் பில்லை போட்டு இப்படி லட்சக்கணக்கான லைக்ஸ்களுக்கு ஏற்பாடு பண்ணித்தரும். அப்படி வருகிற க்ளிக்ஸ்களை ஆராய்ந்தால், தமிழுக்கும் அந்தந்த லைக்ஸ் வந்த நாட்டிற்கும் லைக்ஸ் போட்ட பெயர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது.

உதாரணத்திற்கு டி.ராஜேந்தர் பாடலை உஸ்பெகிஸ்தானிலிருந்து பிரைடன் பெக்காலே லைக்ஸ் போட்டு ரசித்ததாக காண்பிக்கும். அட… இந்த ஜேப்படி திருடனுங்களை மேற்படி தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்யப் போகுதோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கபாலியில் சிவகார்த்தியேன்? இழுபறிக்குள்ளான பா.ரஞ்சித்தின் முயற்சி!

துணி உலர்த்தும் கொடியில் கூட, ரஜினியின் கட்சிக் கொடி பறக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கிறது கோடானு கோடி ரசிகர் கூட்டம்!...

Close