ரெமோவால் மாறிய தனுஷ்! குழப்பிய சிவகார்த்திகேயன்!

புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா… சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!

ரெமோவுக்கு முன், ரெமோவுக்கு பின் என்று பிரித்துக் கொள்கிற அளவுக்கு கன்பியூஸ் ஆகிவிட்டாராம் தனுஷ். அந்த கன்பியூஷனுக்கு பிறகு அவர் எடுத்த முடிவு, சரியா? தப்பா? என்பதை இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கான நேரம் காலம் இன்னும் இன்னும் இருக்கிறது. முதலில் விஷயம் என்ன என்பதை சொல்லிவிட்டால் குழப்பம் இல்லை.

சவுந்தர்யா ரஜினி இயக்குகிற படத்தில் தனுஷ் நடிக்கிறார் அல்லவா? அந்த படத்திற்கு கதை வசனம் தனுஷ்தான். முதலில் அழுத்தமான ஒரு லவ் ஸ்டோரியைதான் கதையாக எழுதி வைத்திருந்தாராம். கிட்டதட்ட சென்ட்டிமென்ட் தூக்கலான கதை. ஆனால் ரெமோவின் வெற்றி, சீரியஸ்சான கதைகளுக்கு வேலையில்லை என்பதை நிரூபித்துவிட்டது. அதை தொடர்ந்து வந்த கொடி, ரெமோவின் வசூலுக்கு சற்று குறைச்சல்தான். இதெல்லாம் தனுஷை நன்றாகவே குழப்பி வைக்க, வேணாம்… சீரியஸ் கதை வேணாம்… என்று முடிவெடுத்துவிட்டார்.

உடனே அந்த கதையை கட்டி அப்படியே பரணில் எறிந்துவிட்டு, வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம். திரும்பவும் மொதல்லேர்ந்தா… என்ற கவலைக்கெல்லாம் இடமேயில்லை. ஏனென்றால், அந்தப்படம் தாறுமாறாக ஹிட் அடித்தவுடனேயே மனசுக்குள் அதன் பார்ட் 2 வுக்கான பேஸ்மென்ட்டையும் எழுப்பி வைத்திருந்தாராம். லேசாக அதில் டச் பண்ணினால், புதிய கதை ரெடி.

அப்படின்னா… சிவகார்த்திகேயனால் குழம்பிய தனுஷ்னு தலைப்பு போட்டுக்கலாமா? லாம்… ம்…!

https://youtu.be/6iWrb1GaYZY

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கார்த்தியால் வந்த கதை!

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவான படம் கூட்டத்தில் ஒருத்தன். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழின் முன்னாள் நிருபரான இவர், சில படங்களுக்கு வசனமும்...

Close