ரஜினியின் ஆசை? நிறைவேற்றினார் தனுஷ்! வெளிவராத பரபரப்பு தகவல்…
ரஜினியின் அடுத்தப்படம் லிங்கா. இதை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார் என்பதெல்லாம் பழைய செய்தியாகிவிட்டது. இந்த லிங்கா வந்த கதை தெரியுமா உங்களுக்கு? லிங்கா கதையே தெரியாது. அதற்குள் லிங்கா வந்த கதை எப்படி தெரியும்? என்று பதறும் ரஜினியின் ரசிக நெஞ்சங்களுக்கு நாம் சொல்லப் போவது அத்தனை பேரும் ரசித்து மயங்க வேண்டிய தகவல்.
இந்த தலைப்பே ரஜினி தேர்ந்தெடுத்ததுதான். ‘லிங்கா தலைப்பை உடனே பதிவு பண்ணிருங்க’ என்று கவுன்சிலுக்கு ஆள் அனுப்பினால் போனவர் சொன்ன தகவல் பொசுக்கென்று ஆக்கியது ரஜினியை. ‘சார்… அந்த தலைப்பை வேறொரு கம்பெனி பதிவு பண்ணியிருக்கு. என்ன யாருன்னு விசாரிச்சுட்டு சொல்றேன்’ என்றார். அங்கேதான் இன்ப அதிர்ச்சி. இந்த தலைப்பை பதிவு செய்திருந்தவர் ரஜினியின் மருமகன் தனுஷ்.
அவர் ஏன் இந்த தலைப்பை பதிவு செய்திருந்தார் தெரியுமா? ரஜினியின் பேரன், தனுஷின் மகன் பெயர்தான் லிங்கா. தனது மகனின் பெயரில் தானே ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த தலைப்பை பதிவு செய்திருந்தார் தனுஷ். ரஜினி சார் இந்த தலைப்பை வைக்க சொல்லியிருக்கிறார் என்ற தகவல் தனுஷுக்கு போனது. அப்புறமென்ன? சார் இந்த தலைப்புல நடிக்கிறார்னா அதைவிட பெருமை இந்த தலைப்புக்கு வேறென்ன இருக்க முடியும்? உடனே தலைப்பை மாற்றி தருகிறேன் என்று கூறிவிட, கைமாறியது லிங்கா.