பாலசந்திரன் படத்தை காட்டினால் தப்பா? இயக்குனர் குமுறல்!

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றிய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் , நாட்டு நலன் மீது அக்கறையுள்ள இளைஞர்களை ஒருமுகப் படுத்துவதற்காகவும் தயாரிக்கப்பட்ட படம்தான் அங்குசம்.

இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்திருந்த கலெக்டர் சகாயம், ‘இதுபோன்ற படங்கள் இன்னும் இன்னும் நிறைய வர வேண்டும்’ என்று வாழ்த்தினார். ‘லஞ்சத்திற்கு எதிரான இந்த படத்தை மக்கள் வெற்றிப்படமாக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அங்குசத்தை இயக்கிய மனு கண்ணனுக்கு மாறாத வருத்தம் ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. எதற்காக?

இந்த படத்தை விருது கமிட்டிக்கு அனுப்பியிருந்தாராம். படத்தை பார்த்த தேர்வுக் குழுவினர் ‘உங்க படத்திற்கு கண்டிப்பா விருது கிடைக்கும்’ என்றெல்லாம் கூட வாழ்த்தினார்களாம். ஆனால் விருது பட்டியலில் இந்த படத்தின் பெயர் வரவேயில்லை என்று வருந்தினார் மனு கண்ணன். அதற்கு காரணமாக அவர் சொல்வது இந்த விஷயத்தைதான்.

மாவீரர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் புகைப்படத்தை ஒரு காட்சியில் காட்டியிருக்கிறேன். யார் மனசையும் ஒரு நிமிஷம் கலங்க வைக்கும் அந்த புகைப்படம்தான் அவர்களுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது போலும். அந்த ஒரு காரணத்திற்காகதான் என் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

படத்தை பார்ப்பவர்களின் தீர்ப்பு என்னவோ?

Read previous post:
நயன்தாரா விஷயத்தில் தம்பி இப்படி பண்ணுதே…? ஜி.வி.பிரகாஷ் மீது திரையுலகம் காட்டம்!

த்ரிஷாவும் நயன்தாராவும் இல்லையென்றால் வாலிபர்களின் உலகம் எப்படியெல்லாம் குப்புற விழுந்து கோழி முட்டையாக உடைந்திருக்கும் என்பதை நினைத்தால், இறைவா... உன் படைப்பில்தான் எத்தனை எத்தனை அழகு என்று...

Close