எ.அ, கா.ச. இரண்டும் ஒரே கதையா? கவுதம்மேனனிடம் போனில் பேசிய தனுஷ்!

கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் குமுறுகிறார்கள் ஏராளமான டாக்டர்கள். இப்போது இவர்களின் கோபம் இன்னும் இரண்டு ஆக்டர்களின் மீது திரும்பினால் ஆச்சர்யமில்லை. ஏன்?

மருத்துவமனைக்கு வரும் சாதாரண நோயாளிகளை கூட படுக்கையில் தள்ளி, பணத்தையும் பறித்து அவர்களிடமிருக்கும் இன்றியமையாத ஸ்பேர்ட் பார்ட்சுகளை கொள்ளையடிப்பவர்களாக மருத்துவர்களை காட்டப் போகிறது இரு படங்கள். ஒன்று ‘என்னை அறிந்தால்’. இன்னொன்று ‘காக்கி சட்டை’. நல்லவேளையாக படத்தில் நல்ல மனிதாபிமானமுள்ள மருத்துவர்களையும் காட்டுகிறார்கள் என்பதால் தராசும் கவிழாது. தகராறும் மூளாது என்று நம்புவோமாக!

ஆனால் மற்றொரு முக்கியமான விஷயம். இரண்டு கதைகளும் ஒன்றுதான் என்கிற தகவல் காட்டுத்தீயாக பரவி வருவதால் கலக்கமடைந்தாராம் தனுஷ். ஏனென்றால் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படத்தயாரிப்பாளர் இவர்தானே? சில நாள் தயக்கத்திற்கு பிறகு கவுதம் மேனனுக்கே போன் அடித்துவிட்டார். ‘சார்… இப்படி ரெண்டு கதையும் ஒண்ணுன்னு தகவல் வருது. எங்க படத்தின் கதை சுருக்கம் இதுதான்’ என்று இவர் சொல்ல, அடுத்த முனையிலிருந்து தன் படத்தின் கதை சுருக்கத்தையும் சொன்னாராம் கவுதம்.

இரண்டு தரப்பும் அவரவர் கதைகளை கேட்டபின் நிம்மதியாச்சா என்பதுதான் இன்னும் ‘புரியல சாமீய்…’

Read previous post:
என்னை அறிந்தால் 29 ம் தேதியும் ரிலீஸ் இல்லை? அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்?

பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால்...

Close