உண்ட வீட்டுக்கு ரெண்டகம்! விக்ரமால் சீரழியும் இயக்குனர்!
கண்கள் மட்டுமல்ல, நெற்றியில் முளைத்திருக்கும் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணையும் கூட பணத்தின் மீதே வைத்திருக்கும் விக்ரம், தன்னை நம்பி வந்த டைரக்டரை தவிக்க விட்ட கதைதான் இது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கவிருந்த படத்தை முதலில் டிஸ்கஷனுக்கு ரூம் கொடுத்தும், டைரக்டருக்கு அட்வான்ஸ் கொடுத்தும் ஆரம்பித்து வைத்தவர் தயாரிப்பாளர் தாணுதான்! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைத்த ஆனந்த் சங்கர், ஒரு சந்தர்ப்பத்தில் தாணுவை விட்டுவிட்டு, அப்படியே ஐங்கரன் நிறுவனத்திற்கு ஷிப்ட் ஆனார். “தாணு வேண்டாம். வாங்க… ஐங்கரன்ல இந்த படத்தை தயாரிக்கலாம்” என்று அவரை கிளப்பிக் கொண்டு போனதே விக்ரம்தானாம்.
ஒரு ஹீரோ கையில் இருந்தால், தயாரிப்பாளர் கூட முக்கியமில்லை. இவர் இல்லேன்னா இன்னொருத்தர். அவரும் இல்லேன்னா வேறொருத்தர் என்று முழுக்க முழுக்க விக்ரமை நம்பி தாணுவை முற்று முழுதாக கைவிட்டார் ஆனந்த் சங்கர். எல்லாம் பத்து எண்றதுக்குள்ள படம் திரைக்கு வருகிற வரைக்கும்தான். வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் அப்படம் பப்படம் ஆகிவிட, அதற்கப்புறமும் விக்ரமை வைத்து படம் எடுக்க ஐங்கரன் என்ன அறியாப்புள்ளை நிறுவனமா?
கூண்டோடு கழன்று கொண்டது. விக்ரமை நம்பி தாணுவை கைவிட்ட ஆனந்த் சங்கர், இப்போ ஐயோ பாவமாகி நிற்கிறார்.
விக்ரம் தன் சம்பளத்தை குறைச்சுகிட்டா, நாங்க ரெடி என்று புலி படத்தை தயாரித்த சிபு தமீமும், பி.டி.செல்வகுமாரும் தூது அனுப்புகிறார்களாம். வானத்துல பறக்குற விக்ரம், பூமிக்கு இறங்குனாதானே சம்பளத்தை குறைப்பார்? பார்க்கலாம்…