எல்லா நாயையும் கொல்லுங்க! மோகன்லாலின் பேச்சுக்கு த்ரிஷா கவலை
கேரளாவில் சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் கடந்த சில மாதங்களாகவே கடும் பிரச்சனை. தெருவெங்கும் திரியும் நாய்கள், அங்கு நடமாடும் பலரையும் பாய்ந்து பாய்ந்து படுத்தி எடுக்கின்றனவாம். சில நாய்கள் ஆர்வ மிகுதியால் ஆங்காங்கே கடித்து வைப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்களாம் அவர்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டிலிருந்து வரும் பூச்சி மருந்தடித்த காய்கறிகள்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே? இந்த நாய்களை கொல்வதா, கூண்டோடு பிடித்துக் கொடுப்பதா என்று பெரும் விவாதம் நடந்து வருகிறது அங்கே. நடிகர் மோகன்லால், ‘எதுக்குய்யா அதுங்க மேல கருணை காட்றீங்க? பிடிச்சு கொல்லுங்க’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கடிக்கிற நாய்க்கு கறி ருசியும், கடிபட்ட ஆளுக்கு சொறி சிரங்கும் வந்து தொலைப்பதெல்லாம் ஜீவகாருண்ய அன்பர்களுக்கு தெரிவதில்லையே? சாலையோர நாய்கள் மீது அன்பு செலுத்தும் த்ரிஷா இன்று சகலகலாவல்லவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். அவரிடம், ‘மோகன்லால் இப்படி நாயெல்லாம் கொல்ல சொல்றாரே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ‘நாய்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வேணும்னா sterilize பண்ணலாம். அப்படி பண்ணும்போது அவைகளோட ஆக்ரோஷம் குறைஞ்சுரும்’ என்றார்.
லாலாட்டனுக்கு கேட்டுருச்சா?