மனசே… உன் பெயர் விஜய் சேதுபதியா? நெகிழும் குறும்பட இயக்குனர்கள்!

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ தொடர்ந்து விஜய் சேதுபதியும் சீனு ராமசாமியும் மீண்டும் இணைந்து ஒரு படத்தை தரப் போகிறார்கள். படத்தின் பெயர் தர்மதுரை. என்னதான் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் என்றாலும், அர்த்த ராத்திரியில் கதவை தட்டி, “அண்ணே சவுக்கியமா?” என்பதை போல, இதென்ன ஓவர் உரிமை? என்று சீனு ராமசாமி பற்றி முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது பலரது நெஞ்சு!

இது ஒருபுறமிருக்க, ‘அடுத்த படமாவது நமக்கு’ என்று நம்பியிருந்த சில குறும்பட இயக்குனர்கள் குழம்பிப் போனார்கள். இவர்கள் விஜய் சேதுபதியை வைத்து குறும்படம் இயக்கியவர்கள் என்ற உரிமையில் அவரை நேராகவே சந்தித்தார்களாம். அங்குதான் சேதுபதியின் நல்லெண்ணம் புரிந்தது. அடிப்படையிலேயே நல்லவராக இருந்தால் மட்டுமே இப்படியொரு கோணத்தில் அணுக முடியும். அப்படியொரு கோணத்தில் அவர்களை அணுகி, இன்டஸ்ரியையே திகைக்க வைத்துவிட்டார் விஜய் சேதுபதி.

தன்னை அணுகி கவலைப்பட்ட அவர்களிடம், “‘இடம் பொருள் ஏவல்’ வெளியே வரல. இந்த நேரத்தில் நான் லிங்குசாமிக்கும் சரி, சீனு அண்ணனுக்கும் சரி. ஹெல்ப் பண்ண வேண்டிய சூழநிலையில் இருக்கேன். அது ஒரு பக்கம் தனியா இருக்கட்டும். உங்களுக்கு நான் பட வாய்ப்பு தர்ற வரைக்குமான குடும்ப செலவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னை வச்சு படம் பண்ற வரைக்கும் உங்களை நான் தவிக்க விட மாட்டேன். உங்க தேவைகள் என்னன்னு கூச்சப்படாம சொல்லுங்க. என்னை வச்சு படம் பண்ணுற வரைக்கும் குடும்ப கவலைகள் இல்லாமல் ரிலாக்சா இருங்க” என்றாராம்.

இப்படியெல்லாம் ஒரு ஹீரோவை நினைத்தே பார்த்திராத அவர்கள், வாயடைத்துப் போனார்களாம். விஜய் சேதுபதியின் நல்ல மனசுக்கு அவரது எல்லா கனவுகளும் நிறைவேறட்டும்…

1 Comment
  1. sandy says

    One of the gems of tamil cinema

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thoongaavanam – Behind The Scenes | Kamal Haasan | Ghibran | Rajesh M Selva

https://www.youtube.com/watch?v=5Oa98lLFKhU

Close