கதகளியில் விஷால் கேத்ரினுக்கு கொடுத்தது போலி கிஸ்சா? -அதெப்படிங்க?

டைரக்டர் பாண்டிராஜ் இப்படியெல்லாம் படம் பண்ணுவாரா? என்று கதகளி ட்ரெய்லரே ஆயிரம் சந்தேகங்களை எழுப்ப, அந்த சந்தேகத்தை நேரில் வந்து போக்கினார் அவர்! இடம் பிரசாத் லேப். நிகழ்ச்சி- கதகளி பத்திரிகையாளர் சந்திப்பு.

பாண்டியநாடு சமயத்துலேயே நான் அவருக்கு இந்த கதையை சொல்லிட்டேன். ‘நாவல் மாதிரி ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இதை டெவலப் பண்ணுங்க’ என்று சொல்லியிருந்தார். நிச்சயம் என்னாலயும் இப்படியெல்லாம் படம் பண்ண முடியும்னு நிரூபிச்சிருக்கேன். நிறைய யோசிச்சுதான் இந்த கதக்களிங்கிற டைட்டில் வச்சோம். அதுக்காக படத்தில் விஷால் கதக்களி ஆடுகிறார்னு அர்த்தமில்ல. ஒரு ஆக்ஷ்ன் மூட் இருக்கணும் என்பதற்காக வைக்கப்பட்ட டைட்டில்தான் அது. இது ஆக்ஷன் படம் இல்ல. ஆனால் படம் முழுக்க ஒரு ஆக்ஷன் மூடு இருந்துகிட்டேயிருக்கும். ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரைக்கும் எல்லா சீன்லேயும் மழையும் இருக்கும். அது இன்னும் கதையின் அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொடுத்திருக்கு.

இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரிக்கு நான் முதல் பிரதி அடிப்படையில் தயாரிச்சு கொடுத்திருக்கேன். பொதுவா தன் படத்திற்கு நிறைய செலவு செய்யணும்னுதான் எல்லா ஹீரோக்களும் எதிர்பார்ப்பாங்க. ஆனால் விஷால் அப்படியில்ல. இந்த படத்தில் எங்கெல்லாம் செலவை குறைக்கலாம்னு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். இப்படியொரு ஹீரோவை பார்க்க எனக்கே ஆச்சர்யமா இருந்திச்சு. படத்தில் இரண்டே பாடல்கள்தான். செகன்ட் ஆப்ல ஒரு பாட்டு இருந்தா நல்லாயிருக்கும்னு விஷால் நினைச்சார். அதுக்காக ஒரு பாடலை எடுத்தோம். கடைசியில் படத்தை பார்த்துட்டு, ம்ஹும். அந்த பாட்டு வேணாம். கதையின் வேகத்தை டிஸ்ட்ரப் பண்ணுதுன்னு அவரே எடுக்க சொல்லிட்டார் என்றார் பாண்டிராஜ்.

இன்டர்வெல் பிளாக்ல ஒரு கொலை நடக்கும். அதை யாரு பண்ணியிருப்பாங்கன்னு ஒரு ரிலே ரேஸ் மாதிரி விறுவிறுப்பா திரைக்கதை அமைச்சிருக்கார் பாண்டிராஜ். பின்பாதி முழுக்க அதுதான் பரபரன்னு ஓடிகிட்டு இருக்கும். இந்த படத்தின் காட்சிகள் 40 சதவீதம்னா, அதற்கு ரீரெக்கார்டிங் 60 சதவீதம் இருக்கணும். அதை ஹிப் ஹாப் ஆதி ரொம்ப சிறப்பா செஞ்சு கொடுத்திருக்கார் என்றார் விஷால்.

முக்கியமான செய்தி- படத்தில் விஷாலுக்கும் கேத்ரின் தெரசாவுக்கும் ஒரு மவுத் கிஸ் இருக்கிறதாம். நீங்க பார்க்கறதுக்கு கிஸ் மாதிரியிருந்தாலும், அந்த கிஸ் போலி கிஸ்ங்க. அவர் கொடுக்கவேயில்ல என்றார் பாண்டிராஜ். போலி என்கவுன்ட்டர் தெரியும். இதென்ன போலி கிஸ்… போங்க சாமிகளா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெள்ளத்துல கார்கள் போச்சே! ஜிவி.பிரகாஷ், ஹாரிஸ் கவலை!

போட்டு போட்டு புரட்டியெடுத்த வெள்ளம், பங்களாவாசிகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏழைக்கு ஈராயிரத்து சொச்சம் என்றால், பணக்காரர்களுக்கு பல லட்சங்கள் லாஸ். சிலருக்கு கோடிகளை தாண்டியும் நஷ்டம்....

Close