அஜீத்தை சந்திக்கப் போன பிரபல ஹீரோ விரட்டியடிப்பு? ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு!

ஒரு மொட்டை மாடியிருந்தால் அதன் மீது நாலைந்து விடலைப்பசங்கள் ஏறி பட்டம் விடதான் செய்வார்கள். இதனால் மொட்டை மாடிக்கு ஒரு லாபமும் இல்லை. ஆனால் பசங்களுக்கு படு ஜாலி. அப்படிதான் அஜீத் என்கிற விஸ்தாரமான மாடி மீது வகைதொகையில்லாமல் ஏறிக் கொண்டு எஞ்ஜாய் பண்ணுகிறது ஒரு இளவட்ட நடிகர்கள் கோஷ்டி. அஜீத் ரசிகர்களின் அன்பை அப்படியே ரவுண்டு கட்டி அறுவடை பண்ணிவிட வேண்டும் என்று பல காலமாகவே திட்டம் போட்டு செயல்பட்டு வரும் சிம்புவில் ஆரம்பித்து, அண்மையில் யட்சன் படத்தில் அஜீத்தின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி கொண்டாடிய ஆர்யா வரைக்கும் எத்தனையெத்தனை ரசிகர்கள் அவருக்கு!

நடுவில் வெங்கட்பிரபு புண்ணியத்தில் ஜெய், பிரேம்ஜி, வைபவ் போன்ற அகா சுகா ஹீரோக்கள் கூட அஜீத் புராணம் பாடி, அவரவர்க்கு கிடைக்க்கி இரையை கொத்திக் கொண்டு கிளம்பிய காட்சியை அன்றாடம் கண்டு களிக்கிறது ரசிகர்களின் மனசு.

சரி… மேட்டருக்கு வருவோம். கடந்த சில நாட்களாக பேட்ச் வொர்க் என்று சொல்லப்படும் விட்டுப் போன பகுதிகளை வெகு ஜரூராக படமாக்கிக் கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. சென்னையிலிருக்கும் மோகன் ஸ்டூடியோவில் நடக்கும் இந்த படப்பிடிப்பிற்கு டைரக்டர் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுகிறார் அஜீத். இதே ஸ்டூடியோவுக்கு அருகில் ரஜினியின் கபாலி படத்திற்காகவும் பிரமாண்டமான மலேசியா செட் ஒன்று தயாராகி வருகிறது. அவர்கள் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன் இந்த படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார் சிவா.

இந்த இக்கட்டான பரபரப்பான சூழலில்தான் நேற்று அஜீத்தை சந்திக்க மோகன் ஸ்டூடியோவுக்கு சென்றார் மங்காத்தாவில் அஜீத்துடன் நடித்திருந்த வைபவ். இவர் பல படங்களில் ஹீரேவாக நடித்து வருகிறார். என்ன காரணத்திற்காக அஜீத்தை சந்திக்க சென்றாரோ? வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாராம். “நான் வந்துருக்கேன்னு அவருகிட்ட சொல்லுங்க. நிச்சயம் என்னை கூப்பிடுவாரு” என்று வைபவ் சொல்ல, “எதுவா இருந்தாலும் நீங்க அவரை வீட்ல போய் பாருங்க. இங்க நாங்க அலோவ் பண்ண முடியாது” என்றார்களாம் வாசலில் நின்ற பொறுப்பாளர்கள்.

கெஞ்சி, போராடி, சத்யாகிரஹம் நடத்தி கடைசியில் திட்டி ஓய்ந்தவர், “தலக்கு மட்டும் இது தெரிஞ்சா உங்களையெல்லாம் சும்மாவிட மாட்டாரு” என்று கதறிக் கொண்டே கிளம்பினாராம். வைபவ்க்கு சொல்ல கூச்சமா இருந்திருக்கும். இதோ- அஜீத் காதுக்கு போற மாதிரி விஷயத்தை போட்டாச்சு! அப்புறம் அவராச்சு. வைபவாச்சு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்! டயலாக் ரைட்டர் பேச்சால் பரபரப்பு!

செக்கா இருந்தாலும் அதேதான். சிவலிங்கமா இருந்தாலும் அதேதான் போலிருக்கிறது. ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நேரத்தை பின்பற்றுகிற விஷயத்தில் ‘யாராயிருந்தாலும் ஒண்ணுதான்’ பாலிசியை கடைபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சம்பந்தப்பட்ட...

Close