இதென்னடா கவுண்டருக்கு வந்த சோதனை?
ஊரையே வளைக்கிற அளவுக்கு ஆலமரம் வளர்ந்தாலும், துளசிக்குதான் மண்டபத்துல மரியாதை! தமிழ்சினிமாவில் புற்றீசல் போல காமெடியன்கள் வந்து கொண்டேயிருந்தாலும் கவுண்டரின் அப்ரோச் எப்பவுமே கோல்டு! படு பயங்கரமான சீர்திருத்த கருத்துக்களை கூட போகிற போக்கில் போட்டுவிட்டு போவதுதான் கவுண்டரின் ஸ்டைல். இப்போதும் அவரது புண்ணியத்தில்தான் ஓடுகிறது அநேக வண்டிகள்.
அப்படிப்பட்ட கவுண்டர், ‘போங்கடா நீங்களும் உங்க போக்கத்த சினிமாவும்’ என்று ஒதுங்கியே இருந்தார். அவரை தேடிச்சென்று அழைத்த இயக்குனர்களுக்கு கூட அவர் நோ சொல்லியே வந்தார். அந்த நேரத்தில்தான் 49 ஓ கதையை அவரிடம் சொன்னார் இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ். இந்த படத்தில் கவுண்டருக்கு விவசாயி வேடம். இந்த ஒரு விஷயத்திற்காகவே நடிப்பதற்கு ஓ.கே சொன்னார் கவுண்டரும்.
படத்தில் வெறும் காமெடி மட்டுமின்றி விவசாயத்தின் மேன்மையை பற்றியும் நிறைய பேசியிருக்கிறாராம் கவுண்டர். இந்த படத்தை மற்றவர்களை விட அதிகம் எதிர்பார்ப்பதும் அவர்தான். எப்பவோ திரைக்கு வந்திருக்க வேண்டிய படம் அது. இன்னும் இன்னும்… என்று தள்ளிக் கொண்டே போகிறது. இந்த நேரத்தில் சும்மாயில்லாமல், இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் வெளிவந்த வானவராயன் வல்லவராயன் படத்தை விலைக்கு வாங்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. ஆனால் கூட்டிக்கழித்து பார்த்தால், ரெண்டு கோடி அவுட்டாம்.
ஏம்ப்பா… 49 ஓ ன்னு ஒரு நல்ல படத்தை எடுத்து வச்சுருக்க? அதை ரிலீஸ் பண்ணுறதை விட்டுட்டு வானவராயன், வவுத்துவலி ராயன்னு எறங்கி காச தொலைக்கணுமா என்றாராம் கோபமாக!
படம் வெளிவந்தால்தான் கவுண்டரு சூடு இறங்கும் போலிருக்கு!