தீர்ந்தது குழப்பம்! சேர்ந்தனர் மீண்டும்!

கவுதம்மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இதில் அஜீத் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார் என்கிற செய்தி உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிற விஷயம்தான். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கவுதம் துடிப்பதையும், அதற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முட்டுக்கட்டை போட்டு வந்த விஷயத்தையும் கடந்த சில தினங்களாக நாம் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தோம்.

பீமா பட நேரத்தில் ஹாரிஸ் ஏற்படுத்திய தாமதத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் ரத்னம். அதன் காரணமாகதான் இந்த இணைப்புக்கு குறுக்கே நின்று முடியவே முடியாது என்று முனகிக் கொண்டிருந்தார் அவர். கடந்த சில தினங்களுக்கு முன் கவுதம், அஜீத், ஹாரிஸ், ரத்னம் ஆகிய நால்வரும் சந்தித்தார்களாம். அப்போது ஹாரிஸ் பின்னணி இசையமைக்க எடுத்துக் கொள்ளும் தாமதம் பற்றி வெகுவாக கவலை தெரிவித்தாராம் ரத்னம். இன்னும் சில படங்களையும் அவர் ஒப்புக் கொண்டிருப்பதால், சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்க என்று அவர் கூறியதாகவும் தகவல்.

படமே அடுத்த தீபாவளிக்குதான் வெளியாக போகிறது. அதற்கு இடையில் நிறைய கால நேரம் இருப்பதால், ஒன்றும் கஷ்டமில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதனால்…?

பிரிந்திருந்த கவுதம்- ஹாரிஸ் இணைப்பு நடந்தேவிட்டது. இந்த படத்தை தயாரிப்பது கவுதம் அல்ல என்பதாலும், சம்பளம் சரியாக வந்து சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையாலும் யெஸ் சொல்லிவிட்டாராம் ஹாரிஸ்.

கடம் வாசிக்கிறேன்னு பானைய டேமேஜ் பண்ணிராதீங்க கவுதம். மறுபடியும் ஒட்ட வைக்க மற்றொரு அஜீத் வர மாட்டார்.

Read previous post:
ஆக்சிலேட்டரை முறுக்குங்க சிவா…!

விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லாத எவராலும் வெற்றியை அடைய முடியாது. அண்மைக்காலமாக விமர்சனங்களுக்கும் மதிப்பளிக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாப் ஸ்டார்களில் ஒருவராக அவர் முன்னேறிக் கொண்டிருக்கிற...

Close