ரஜினியை அசிங்கப்படுத்தும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் சப்போர்ட்!

கொஞ்ச நாட்களாகவே ஏறுக்கு மாறாகவே நடந்து கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். விஜய் ஆன்ட்டனி போல திரைக்கு வந்து வெற்றியை ருசித்த இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷும் முக்கியமானவர். ஆனால் வி.ஆ வை பொருத்தவரை அவர் நடிப்பதெல்லாம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம். ஜி.வியை பொருத்தவரை எல்லாமே ஏடாகூடம்! அட… தேர்ந்தெடுக்கும் படங்களில்தான் இப்படியென்றால், தோள் கொடுத்து தூக்கிவிட நினைக்கும் படங்களும் பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது. ஏனிந்த ஏறுக்கு மாறு?

எல்லாம் ஆர்வக்கோளாறினால் வந்த ஆணவம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்வது இந்த படத்தைதான். அட்றா மச்சான் விசிலு என்றொரு படம் தயாராகி வருகிறது. அதன் கதை இதுதான். ஒரு முன்னணி நடிகர் நடித்த படம் தோல்வியாகிவிடுகிறது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அந்த நடிகரை கார்னர் பண்ணி தங்கள் பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள் என்பது போல நகர்கிறதாம் அப்படம். இதில் பிரபல மோசடி மன்னன் பவர்ஸ்டார் சீனிவாசன் ஹீரேவாக நடிக்கிறார். ரஜினியை நேரடியாக தாக்குவது போலவே வசனங்களும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த படத்திற்குதான் ஒரு பாடலை தன் குரலில் பாடிக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அட்றா மச்சன் விசிலு படத்தில், பாட்ஷா படத்தில் ரஜினி சொல்லும் எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற வசனத்தை ரஜினி ரசிகர்கள் ஆத்திரப்படுகிற அளவுக்கு கிண்டல் அடித்திருக்கிறார்களாம். ஜி.வி.பிரகாஷும் எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படியெல்லாம் மேற்படி படத்தோடு ஒன்றிப்போன ஜி.வி.பிரகாஷ், ஏன் ரஜினிக்கு எதிரான முடிவை எடுத்து வருகிறார் என்பதுதான் புரியாத புதிர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மூன்று கெட்டப்…ஆனால்? ஒரே விஜய்தான்! தெறி பட சீக்ரெட்!

தெறி படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அலசி ஆராய்ந்து தீர விசாரித்து படத்தை ஏப்ரலுக்கு பிறகு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனிந்த அலசலும்,...

Close