மூன்று கெட்டப்…ஆனால்? ஒரே விஜய்தான்! தெறி பட சீக்ரெட்!
தெறி படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அலசி ஆராய்ந்து தீர விசாரித்து படத்தை ஏப்ரலுக்கு பிறகு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனிந்த அலசலும், ஆராய்ச்சியும் என்பதை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் விஜய்க்கு ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருப்பதால் பரிட்சை முடியட்டும் என்கிற காரணம்தான் முக்கியமானதாக இருந்திருக்கிறது அனைவருக்கும்.
இதற்கிடையில் தெறி படத்தில் சமந்தாவுக்கும் விஜய்க்கும் பிறக்கிற குழந்தைதான் மீனாவின் மகள் நைனிகா என்றும், சமந்தாவின் கொலைக்கு பின் நைனிகாவையும் மொட்டை ராஜேந்திரனையும் வட நாட்டுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் விஜய், க்ளைமாக்சில் அங்கு போய் இணைந்து கொள்வதும்தான் முழு படம் என்கிறார்கள். நடுவில் எமியுடன் காதல் வருவதெல்லாம் ஜஸ்ட் லைக் இளமை பட்டாளங்களுக்காகவாம்!
இந்த படத்தின் ஸ்டில்கள் இதுவரை கசிந்த விதத்தில் விஜய்க்கு மூன்று கெட்டப்புகள், மூன்று வேடங்கள் போல காட்சியளிக்கிறதல்லவா? ஆனால் ஒரே ஒரு விஜய்தான் வெவ்வேறு கெட்டப்புகளில் வருகிறாராம்.
அப்படியே இன்னொரு நல்ல செய்தி! நடுவில் விஜய்யே அட்லீயை அழைத்து தன் வீட்டில் விருந்தளித்து நாம மீண்டும் ஒன்று சேர்ந்து இன்னொரு படம் தர்றோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரல்லவா? அதை மனதில் வைத்துக் கொண்டு, படம் முடியும் போது தெறி பார்ட் 2 விரைவில் என்ற அறிவிப்பை போட்டிருக்கிறாராம் அட்லீ.
கொண்டாடுங்க விஜய் பேன்ஸ்…