சங்கிலி புங்கிலியில் மறைக்கப்பட்ட ஒரு விஷயம்?
தமிழ்சினிமாவில் சமீபத்தில் ஒரேயடியாக டாப்புக்கு போன ஒரு பெண் இயக்குனர் யாரோட பொண்ணு? என்று கேட்டால், வாயடைத்துப் போவீர்கள். ஆனாலும் ரகசியம் இன்னும் காக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. (நாங்க மட்டும் சொல்லிடுவோமாக்கும்?) போகட்டும்… இன்னொரு ரகசியத்தையும் இப்போது மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அட… இதையேன்ப்பா மறைக்கிறீங்க? எல்லாம் நல்ல விஷயம்தானே…? என்று யாராவது பின்னால் நின்று புஷ் பண்ணினாலொழிய இதையும் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது. (இதை நாங்களே ஓப்பன் பண்றோம் ஆப்பீசர்ஸ்…)
‘சங்கிலி புங்கிலி கதவத் திற’ என்றொரு படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் இயக்குனர் ஹரி, மறைந்த நடிகரும் சிந்தனையாளருமாகிய எம்.ஆர்.ராதாவின் பேரனாம். ஆனால் இப்பட விளம்பரங்களிலும் சரி, செய்தி குறிப்பிலும் சரி. ஒரு இடத்தில் கூட இதை குறிப்பிடவில்லை அவர். இவ்வளவுக்கும் இந்த படத்தில் ராதாரவிக்கு முக்கியமான ஒரு ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் கூட வாயை திறக்கவில்லை.
இந்த படத்தில் மறைக்கப்பட்ட இன்னும் சில விஷயங்களும் இருப்பதுதான் வொய்? வொய்? சமாச்சாரம். வேறொன்றுமில்லை. சங்கிலி புங்கிலியின் இணைத்தயாரிப்பாளர் இயக்குனர் அட்லீ. கமலிடம் உதவியாளராக இருந்தவர் ஹரி. இப்படி பல ஸ்டார்கள் தர வேண்டிய நிலையில் இருக்கும் இப்படம் திரைக்கு வரும்போது ஒவ்வொன்றாக சொல்லி அதிர வைக்கப் போகிறார்களாம்.
ஆமா… குழம்பு கொதிப்பதற்கும் கொடுவா மீனு வேகறதுக்கும் கூட ஒரு நேரம் வரணுமில்லையா? வரட்டும் வரட்டும்…
பின்குறிப்பு- ஆமா… இந்த செய்திக்கு எதுக்கு லாரன்ஸ் மற்றும் அழகான இடுப்புப் படம்? அட… காஞ்சனா படத்தின் மூலம் இப்படியொரு டைட்டிலை நாட்டுக்கு அர்ப்பணித்ததே அவர்தானேய்யா?