சோதனையை முறியடித்த விஷால்! பாயும்புலியின் கடைசி நேர டென்ஷனை விஷால் காலி பண்ணியது எப்படி?

சின்ன முள் குத்தினால் கூட, அது விஷாலை குத்திய முள் என்றால், அதற்கு மஞ்சள் தண்ணி ஊற்றி ஒரு பிரமாண்டமான பூஜையே நடத்த தயாராக இருக்கிறது ஒரு கோஷ்டி. அதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டே கவனமாக நடை நடக்கும் விஷாலுக்கு கடைசி நேரத்தில் வந்த சோதனை, அந்த பழனி மலையை விட பெரிசு! பாயும் புலியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று ஒரு பெரிய சதி வலையே பின்னப்பட்டது. அதற்கு பின்னணியாக வெளியில் தெரிகிற பல காரணங்கள் இருந்தாலும், வெளியில் தெரியாத ஒரே காரணம், அது விஷால் நடித்த படம் என்பதும், அதை எப்படியாவது முடக்கிவிட்டால் மனதளவில் அவரை தொய்வடைய வைக்கலாம் என்பதும்தான்.

திடீரென பட ரிலீஸ்களை தள்ளி வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஒரு ஊசி வெடியை கொளுத்திப் போட்டது தயாரிப்பாளர் சங்கம். இதற்கு உள்ளுக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு. அது ஒருபுறம் இருக்க, நாங்கள் எங்க ஏரியாவுல படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று மல்லுக்கு நின்ற என்எஸ்சி ஏரியாவில் கூட, தடையை மீறி பாயும் புலியை வெளியிட துணிந்தனர் சில தியேட்டர்காரர்கள். இந்த பிரச்சனையெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரத்தில், ரிலீஸ் நேரத்தில் வரும் டெபிசிட் என்கிற ஆயுதம் இந்த படத்தின் கழுத்தையும் நெரிக்க ஆரம்பித்திருந்தது. சில கோடிகளை விஷால் விட்டுக் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்கிற சூழ்நிலை.

தகவல் விஷால் காதுக்கு போக, என் சம்பளத்தை நான் விட்டுக் கொடுத்தால் படம் வெளியில் வந்துரும்னா அதுக்கு நான் தயார். எதிரிகள் முகத்தில் கரியை பூசுங்க என்றாராம். கிட்டதட்ட மூன்று கோடி வரைக்கும் அவர் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.

நக்கல் சிரிப்பு சிரித்த சுதீப்புகளுக்கெல்லாம் ராஜமவுலியின் “நான் ஈ” யாகி நின்று ஜெயித்தே விட்டார் விஷால். சொன்ன தேதியில் உலகமெங்கும் படம் ரிலீஸ். “நாங்க ரிலீஸ் பண்ண மாட்டோம்” என்று உதார் விட்ட என்எஸ்சி ஏரியா உட்பட!

Read previous post:
வைகோவை சூரி சந்தித்தது ஏன்? பின்னணியில் நடந்தது இதுதான்!

‘சீமானை பார்த்தார், வைகோவை பார்த்தார்...எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னேற்றத்துக்குதான்’ என்று பொடி வைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஊர். “ஏம்ப்பா வளர்ந்து பெரிய இடத்தை புடிச்சுட்ட இந்த நேரத்துல...

Close