நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? பற்றியெரியும் கோடம்பாக்ஸ்

“இனிமே அந்த பையனோட சுத்துன? அவ்வளவுதான்… உன் கேரியருக்கு மட்டுமில்ல. உனக்கும் சேர்த்து சவப்பெட்டி செஞ்சுருவோம்” இப்படியொரு மிரட்டல் நயன்தாராவுக்கு வந்தபின்தான் அந்த பையனை கைவிட்டு விடும் முடிவுக்கு வந்தாராம் அவர். கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்ட அந்த ‘குண்டாஸ்’ காதலுக்கு அதற்கப்புறமும் ‘முண்டாஸ்’ கட்டுவதற்கு நயன்தாரா என்ன அறியாப்புள்ளையா?

உடனடியாக வரிசையில் நிற்கும் இன்னொருவருக்கு சம்மதம் சொல்லிவிட்டார். “அந்த இன்னொன்னுதாண்ணே விக்னேஷ் சிவன்! ” இப்படியொரு வாழைப்பழ காமெடியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நயன்தாராவுக்கு உண்டோ, இல்லையோ? அந்த படா படா பேமிலிக்கு உண்டு. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள் என்பதை நாட்டிலிருக்கும் நண்டு சுண்டு குளவி கிழவி என்று எல்லாருக்கும் சொல்லியாகிவிட்டது. லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் என்ன தம்பி?

சென்னையிலேயே மிகப்பெரிய அபார்ட்மென்ட் ஒன்றை விலைக்கு வாங்கி அதில்தான் குடியிருக்கிறார்களாம் இருவரும். ரகசியமாக திருமணமும் முடிந்தாகிவிட்டது என்கிறது கோடம்பாக்கம். தனது கணவருக்கு காதல் பரிசாக விலையுயர்ந்த கார் ஒன்றையும் பரிசளித்திருக்கிறாராம் நயன்தாரா. படப்பிடிப்புக்கு அங்கிருந்தே கிளம்பி வருகிறார் அவர். படப்பிடிப்பு முடிந்ததும் அதே வீட்டிற்கு சென்று கூடு அடைந்துவிடுகிறார் என்கிறார்கள்.

பத்தோட பதினொன்னு. அத்தோட இது ஒண்ணு என்று அலட்சியமாக இருந்த சக போட்டியாளர்கள்(?) இந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தவியாக தவிக்கிறார்கள். இப்படியொரு திருப்பம் நிகழும் என்பதை எதிர்பார்க்காத இன்டஸ்ட்ரியும், தன் அகல் விளக்கு கண்களால் அரையிருட்டை துழாவிக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் கல்யாணத்தை இப்போது அறிவிக்கும் முடிவில் இல்லையாம் இருவரும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழனுக்குதான் தலைமை பொறுப்பு! உறக்கம் கலைந்த பாரதிராஜா!

“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத...!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள்....

Close