தமிழனுக்குதான் தலைமை பொறுப்பு! உறக்கம் கலைந்த பாரதிராஜா!

“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத…!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத அமலாவையும், இந்திக்கு மட்டுமே இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் காஜல் அகர்வாலையும் எங்கிருந்தோ கொண்டுவந்து நடிக்க வைப்பாராம். தெலுங்குக்காரரான விஷாலின் படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பாராம். ரஜினி வேண்டும், அர்ஜுன் வேண்டும் என்றெல்லாம் துடிப்பாராம். குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும், “சேச்சே… அவங்கள்லாம் தமிழனுங்க இல்லேப்பா” என்பாராம்.

அவர் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை அப்படிதான் இருக்கிறது.

நடிகர் சங்க விவகாரம் கடந்த சில மாதங்களாகவே புகைச்சல் விட்டுக் கொண்டிருக்கிறது. தீயணைப்பு வண்டிக்கெல்லாம் சொல்லி ஓய்ந்து போய்விட்டார்கள் பலர். அட… எரிஞ்சே ஆகணும்னு துடிக்கிறாய்ங்க. எரிஞ்சுட்டு போவட்டும்யா என்று இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவே தயங்கி ஒதுங்கிக் கொண்டார்கள் மேலும் சிலர். அப்போதெல்லாம் எங்கு போனாரென்றே தெரியாத இயக்குனர் இமயம், தேர்தலுக்கு இன்னும் 48 மணி நேரமே இருக்கிற நிலையில் இந்த சூடான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில் தமிழரல்லாதவர்கள் இங்கு வரலாம். நடிக்கலாம். வந்தாரை வாழ வைக்கும் குணம் கொண்ட நாங்கள் அதை ஆதரிப்போம். ஆனால் அவர்கள் தலைமை பொறுப்புக்கு வருவதை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதனால் நடிகர் சங்க தேர்தலில் உறுப்பினர்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் இந்த கல்லுக்குள் ஈரம் ஹீரோ.

தமிழனை பேசி பேசி ஏமாற்றும் உரிமையும் தமிழனுக்கே உண்டு என்பதை பல வருஷங்களாகவே அனுபவித்து வரும் திருவாளர் பொதுஜனம் பாரதிராஜாவின் பேச்சை எந்த ரேஞ்சில் வைக்கப் போகிறதோ?

Read previous post:
ஐயோ பாவம் அரவிந்த்சாமி! பாலா அழைக்கிறார்…

இந்த போட்டோவுக்கு வசனம் தேவையில்லை என்பது மாதிரிதான் சில செய்திகளுக்கான முன் குறிப்பும்! பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகிற அத்தனை பேரும் ஏதோவொரு விதத்தில் இம்சைக்குள்ளாவார்கள்...

Close