ஜெய் இஸ்லாமியராக மாறிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!

யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாமியராக மாறிய செய்தியை அந்த செய்தி பிற ஊடங்களில் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கப்புறம் கோடம்பாக்கத்தில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவிருக்கும் ஹீரோக்கள் சிலர் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அதை இந்த நிமிடம் வரை மறுத்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் நடிகர் ஜெய் இஸ்லாமியராகிவிட்டார் என்றொரு பரபரப்பான செய்தி வெளியானது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவர் தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் ஒரு பெரிய மசூதிக்கு தொழுகை செய்ய வந்து கொண்டிருக்கிறார். அவருடன் தவறாமல் வருகிறவர் ‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் அகமது. இது மட்டுமல்ல, கடந்த ரம்ஜான் நேரத்தில் அவர் நோன்பு இருந்ததையும் அவரது நண்பர்கள் உறுதி செய்கிறார்கள்.

இவ்வளவுக்கு பிறகும் அவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவில்லையாம். அந்த மத கோட்பாடுகள் பிடித்திருப்பதாகவும், அதனால் அதை கடைபிடிப்பதாகவும் கூறிவரும் ஜெய், இன்னும் முறைப்படி இஸ்லாமியராக மாறவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

பாதி கிணறு தாண்டியாச்சு, இன்னும் என்ன தயக்கம் என்று விசாரித்தால் அவர் மதம் மாறுவதை குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும், அவர்களை கன்வின்ஸ் செய்துவரும் ஜெய் சம்மதத்திற்காக காத்திருக்கிறார் என்றும் தகவல் வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேசிய கட்சி அழைப்பு நயன்தாரா ஓட்டம்

கடந்த வார நியூஸ் இது. சற்று தாமதமாகதான் நமது காதுக்கு வந்தது. வேறொன்றுமில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேரும் வயலுக்கு சென்று, நாட்டு நட்டு, களை பறித்து, வெயிலில்...

Close