கர்மவீரர் காமராஜும் நடிகர் நாகார்ஜுனாவும் ஒன்றா? பரபரப்பை கிளப்பிய விவேக்!
ரசனை மேம்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதா, அல்லது மேற்படி படங்களை பார்த்து அதற்குள் கரைந்து எடுக்கிறார்களா, தெரியவில்லை. ஆனால் அற்புதமான அயல்நாட்டு படங்களை குறிப்பாக ஈரானிய பிரெஞ்ச் படங்களை தமிழில் ரீமேக்குகிற வழக்கம் வந்திருக்கிறது. அண்மையில் திரைக்கு வந்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படமும், விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘தோழா’ படமும் அப்படியொரு முயற்சிதான். ஆனால் தமிழில் பல நூறு கதைகள் ஃபிரஷ்ஷாக காத்திருக்கும் நிலையில், தேவையா இது? என்ற முணுமுணுப்பும் வருமல்லவா? வந்திருக்கிறது. அதை தோழா பிரஸ்மீட்டில் கார்த்தியிடமே கேட்டார் ஒரு மூத்த நிருபர்.
“இங்கெல்லாம் கதையேயில்லேன்னு நீங்க InTouchables பிரெஞ்ச் படத்தை ரீமேக் ரைட்ஸ் வாங்கி எடுத்திருக்கீங்களா?” என்று அவர் கேட்க, மிக சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பதிலளித்தார் கார்த்தி.
“நீங்க கேட்பது சரிதான். ஆனா நாங்க அந்த படத்தை அப்படியே சீன் பை சீன் காப்பி அடிக்கல. அந்த நாட் மட்டும்தான் அப்படியே பயன்படுத்தினோம். மற்றபடி பல காட்சிகளை நாங்க சேர்த்திருக்கோம்” என்றார். தோழா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவேக், நாகார்ஜுனாவையும் காமராஜரையும் ஒப்பிட்டு பேசினாலும், அது எந்த விதத்திலும் யாரையும் விமர்சிக்க வைக்காதளவுக்கு பொருத்தமாக இருந்தது.
“நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்னு தைரியமா சொன்ன அரசியல் தலைவர் ஒருவர்னா, அது காமராஜர்தான். இந்த நாட்டுக்கு அவ்வளவு நல்லது செஞ்சுருக்கேன். நான் பிரச்சாரத்துக்கு கூட போக தேவையில்லை. படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” என்றார். அதே மாதிரி இப்ப சொல்ற கட்ஸ், ஒருத்தருக்கு இருக்குன்னா அது நம்ம நாகார்ஜுனாவுக்குதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரேவான அவர், இந்த படத்தில் ஒரு வீல் சேரில் உட்கார்ந்தபடியே நடிச்சுருக்கார். அந்த தைரியத்துக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவரை பாராட்டணும்” என்றார்.
“அவ்வளவு உணர்ச்சிகளையும் அவர் கண்களிலும் முகத்திலுமே காட்டி நடிச்சுருக்கார். அதெல்லாம் சாதாரண விஷயமேயில்லை” என்று மனமுருகினார் கார்த்தி. ஒரு முக்கியமான விஷயம். இந்த படத்தில் தமன்னாவின் அழகு, தாறு மாறாக இருக்கிறதாம். இதையும் கார்த்திதான் தன் வாயால் சொல்லி மகிழ்ந்தார்.
கார்த்தி சொன்னா சரியாதான் இருக்கும்!
//கர்மவீரர் காமராஜும் நடிகர் நாகார்ஜுனாவும் ஒன்றா? பரபரப்பை கிளப்பிய விவேக்!//
*தோழா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவேக், நாகார்ஜுனாவையும் காமராஜரையும் ஒப்பிட்டு பேசினாலும், அது எந்த விதத்திலும் யாரையும் விமர்சிக்க வைக்காதளவுக்கு பொருத்தமாக இருந்தது.*
வாய்க்கா வரப்புத் தகறாரு இன்னும் தீரலையா?