ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை வசூலாகவே பார்க்கும் செங்கல்பட்டு தியேட்டர்காரர்களுக்குதான் இப்படியொரு அவஸ்தை. இந்த கோடைக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு படமும் இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. எனவே போட்டியே இல்லாமல் புல் ஸ்பீடில் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய்.

சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா இடங்களிலும் மீண்டும் வசூல் வேகத்தை அதிகரித்திருக்கிறது தெறி. தியேட்டர் சைடில் 102 கோடிக்கும், தொலைக்காட்சி சேனலுக்கு 25 கோடிக்கும் வியாபாரம் செய்து, ஒரு புதிய புரட்சியை விதைத்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் போட்ட பணத்தை மீட்டு விட்டார்களாம் எப்.எம்.எஸ்சில். இந்த நிலையில்தான் மிச்சமிருக்கிற கோடை விடுமுறைக்காகவாவது தெறியை மீட்டு தியேட்டரை நிரப்பலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம் முதலில் இப்படத்தை ஏதேதோ காரணங்களுக்காக புறக்கணித்த செங்கல்பட்டு தியேட்டர்காரர்கள்.

“சீக்கிரம் சமாதானம் பேசி தெறியை கொண்டு வாங்க” என்று பிரஷர் கொடுத்து வருகிறார்களாம். ஆனால் தாணு வழக்கம் போல இறுக்கமாக இருக்கிறாராம். “எனக்கு லாபத்தில்தான் நஷ்டம். ஆனால் வருஷத்துக்கு ஒரு முறை வரும் கோடை விடுமுறை கலெக்ஷனை கோட்டை விட்டுட்டாங்களேப்பா…” என்று அவர் அடிக்கும் கமென்ட் டி.டி.எஸ் எபெக்டில் ஒலித்து வருகிறது.

அபிராமி ராமநாதனும், திருப்பூர் சுப்ரமணியமும் நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தை ஒரு முடிவுக்கு வருமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிஸ்ட்ல பேரே இல்ல! நியாயமே இல்லாமல் ஹன்சிகா புறக்கணிப்பு

மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா...

Close