ஜெயம் ரவி பார்ட்டியில் ரகளை… சிம்பு நயன்தாரா நேரடி மோதல்?

பார்ட்டி இல்லாத சினிமாக்காரர்களும், பந்தா இல்லாத அரசியல்வாதியும் வேஸ்ட். அதற்காக கொடுத்தாரா? அல்லது நாலு பேர் உளறுனா கவலை போகும் என்று நினைத்தாரா தெரியவில்லை. நடிகர் ஜெயம் ரவி தனது நெருங்கிய சினிமா நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி வைத்தார். அந்த பார்ட்டியில் நடைபெற்ற ஆ…ஊ…ஐயோ ரக கூச்சல்தான் இந்த தலைப்பும் மலைப்பும்.

ஜெயம் ரவிக்கு நெருக்கமான நண்பர்கள் என்றால் அது ஜீவா, விஷால், ஆர்யா, ஜித்தன் ரமேஷ், காமெடி சத்யன் ஆகியோர்தான். இவர் கொடுத்த பார்ட்டியில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தவர், (விடுக்கலேன்னா கூட வந்திருப்பாங்க, அது வேற விஷயம்) எக்ஸ்ட்ரா அழைப்பாக சிம்புவையும் வரச் சொல்லியிருந்தாராம். அதிலொன்றும் தப்பில்லை, அந்த பார்ட்டிக்கு நயன்தாரா வராமலிருந்திருந்தால். ஆனால் அவர் ஜெயம் ரவியின் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறாரே, அதனால் அவருக்கும் அழைப்பு போனதாம்.

சற்று தாமதமாக வந்த சிம்பு, நயன்தாராவை கண்டதும் லேசாக ஜெர்க் ஆனாராம். அதற்கப்புறம் சிறிது நேரம் சென்ற பின்பு மெல்ல அவரிடம் போய் பேச்சுக் கொடுக்க, ஆரம்பித்தது வினை என்கிறார்கள் பார்ட்டியிலிருந்த ’பப்ளிக்’ வாயர்கள். இவரென்று பேச அவரொன்று பேச, சிறிது நேரத்தில் இருவரும் காச்மூச் என்று சண்டை பிடித்துக் கொண்டார்களாம். உன்னை பார்த்ததிலிருந்தே என் நிம்மதி போச்சு. இனிமேலும் என்னை டிஸ்ட்ரப் பண்ணினே… நடப்பதே வேறு என்று நயன்தாரா கூச்சலிட்டாராம். எப்படியோ சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தார்களாம்.

சந்தோஷமெல்லாம் ஒன்று கூடினால் ஹேங் ஓவர் ஆகலாம். ஆனால் ஹேங் ஓவரெல்லாம் சேர்ந்து குடித்தால் நிலைமை என்னாகும்?

1 Comment
  1. dinesh says

    Simbu is an idiot.he has no culture..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தீர்ந்தது பிணக்கு திரும்பவும் ஷுட்டிங் மீண்டும் சிம்பு நயன் துள்ளல்

சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே, ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ரியும் வாயை பிளந்து ஆஹாவென்றது. ஆனால் இந்த ஆஹாவை அடுத்தடுத்து வந்த செய்திகள் ஓஹோவாக்கி, அப்புறம் ஓ...வ்வ்வ்வ்வ்...

Close