நான் போலீஸ் இல்ல…போராளி! ஜெயம் ராஜாவின் ஆவேச அப்ரோச்!

ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. நெட்டுக் குத்தா வளர்ந்து வெட்டுக் குத்துக்கும் பொருந்துற மாதிரி ஆக்ஷன் ஹீரோ கிடைச்சா அலேக்தான்! கண்களை கண்ட இடத்திற்கும் அலைய விடவில்லை டைரக்டர். கையிலேயே டெபிட் கார்டு இருக்கும் போது பக்கத்துவீட்ல தலையை சொறிவானேன்…? சட்டென்று தன் தம்பியையே படத்தின் ஹீரோவாக்கிவிட்டார் ஜெயம் ராஜா. (அரே படீஸ்… இனி அவர் மோகன் ராஜாவாம்) வழக்கம் போல இந்த முறையும் என் தம்பிகிட்ட கதை சொல்லல. வாடா… இந்த படத்துக்கு சரியான ஒரு வில்லன் பார்த்துருக்கேன். ரெண்டு பேரும் போய் கேட்போம். அவர் சரின்னு ஒத்துக்குவாரு… ராஜா சொல்லி ஜெயம் ரவியை அழைத்துச் சென்ற இடம், முன்னாளும் இந்நாளும் எந்நாளும் அழகனாக விளங்கும் அரவிந்த்சாமி வீட்டுக்கு.

ஹீரோவும் டைரக்டரும் சேர்ந்து வந்து கால்ஷீட் கேட்கிறீங்க. அது மட்டுமல்ல, இந்த மாதிரி கதையில் நான் தேடிப் போய் நடிக்கணும். அந்த கதையே என்னை தேடி வரும்போது நான் ஏன் விடணும்? என்றாராம் அரவிந்த்சாமி. வேலை சுலபமாகிருச்சு. தனி ஒருவன் என்ற தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்து முடித்திருக்கிறார் மோகன்ராஜா. படம் இன்னும் சில வாரங்களில் ரிலீஸ்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. படத்தில் இவரும் தேர்வில் தோற்றுப்போன ஒரு ஐபிஎஸ் அதிகாரியாம். அவருக்கு உடுப்புதான் இல்லையே தவிர, நயன்தாராவின் வழக்கமான எடுப்பும் மிடுக்கும் எல்லாரையும் கவிழ்த்து போட்டுவிடும் என்பது உறுதி. ஏன்ங்க…? படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை ரிலீசுக்கு முன்னாடியே பார்த்துட்டோம்ல?

பொதுவா சினிமாவுல ஒரு ஃபார்முலா உண்டு. ஹீரோ தன் வழியில் போவான். வில்லன் குறுக்கிட்டு வம்பு வளர்த்து கடைசியில் தோற்றுப் போவான். நான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். ஏன் காலம் காலமா வில்லன்தான் ஹீரோவின் லைப்ல குறுக்கிடணுமா? இப்படி ஒருத்தன் தப்பு பண்ணுறான். அவன் நம்ம லைன்ல கிராஸ் ஆனா பார்த்துக்கலாம்ங்கறது என்ன மாதிரியான ஹீரோயிசம்? அதை உடைக்கிறேன் இந்த படத்தில். வில்லன் பாட்டுக்கு சிவனேன்னு அவன் வேலையை பார்த்துகிட்டு இருக்கான். ஹீரோவே தேடிப்போய் பொளக்கிறான் என்றார் மோகன்ராஜா.

படத்தில் ஒரு டயலாக் வருகிறது. ‘நான் போலீஸ் மட்டுமில்ல…. போராளியும் கூட!’

வேலாயுதம் ஹிட்டுக்கு பிறகு அந்த சூடு குறையாம வர்றாரு ராஜா. பட்டத்து யானையை ரெடி பண்ணி வைங்கப்பா… மாலை போடணும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜில்லா தெலுங்கு ரிலீஸ்! ஹிட்டை தொடர்ந்து அதிகரிக்கப்படும் தியேட்டர்கள்

ஊரே சேர்ந்து ஒண்ணா குலவை போடணும்னா, படத்துல கலவை நல்லாயிருக்கணும்! இதுதான் விஜய் பட பாணி. எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் குறைந்த பட்ச பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல்...

Close