விஜய் ஏமாத்திட்டாரு… மீண்டும் ஒரு கத்தி கதை!

‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா?’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா? அவ்ளோதானா? என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா ரசிகர்கள் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் ஆந்திராவிலிருந்து இன்னொரு குண்டு! வீசியிருப்பவர் நரசிம்மராவ். ‘கத்தி கதை அப்படியே என்னோடது. இதை நான் சும்மாவிட மாட்டேன்’ என்று தெலுங்கு படவுலகத்தின் முக்கிய அமைப்புகளில் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கத்தி படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியீட்டையே கூட ஸ்டாப் பண்ணி வைத்திருக்கிறார்களாம் அங்குள்ள அமைப்பினர். விஷயம் அவ்வளவு சீரியஸ்சா போச்சா?

யார் இந்த நரசிம்மராவ்?

‘நண்பன்’ படத்தில் ஷங்கரிடன் இணை இயக்குனராக பணியாற்றியவராம். இது போன்ற பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றும் இணை இயக்குனர்களுக்கு ஃபியூச்சர் பிரைட்டாக இருக்கும். சட்டென படத்தின் ஹீரோவை நெருங்கிவிடுகிற சவுகர்யங்கள் நிறைய வாய்க்கும். கதை சொல்வது… காட்சிகளை விளக்குவது… டப்பிங் நேரத்தில் அருகிலேயே இருப்பது… என்று படம் முடிவதற்குள், ஹீரோவின் சட்டை பாக்கெட் வரைக்கும் சட்டென்று பயணித்து விடுவார்கள். நரசிம்மராவ் விஷயத்திலும் அதுதான் நடந்தது. படத்தின் ஹீரோ விஜய்யிடம், ‘சார்… ஒரு நல்ல கதை இருக்கு கேட்கிறீங்களா?’ என்றாராம். விஜய்யும் சம்மதிக்க, இந்த கத்தி கதையை வரி விடாமல் ஒப்பித்திருக்கிறார். ‘ஃபியூச்சர்ல முடிவெடுப்போம்’ என்று விஜய்யும் நம்பிக்கை தர அதற்கப்புறம் அவரை பின்பற்ற முடியாமல் ஆந்திராவில் கரையொதுங்கிவிட்டார் நரசிம்மராவ்காரு!

காரு வாங்குனீயே, காத்தடிச்சியா? என்று யாரும் கேட்க முடியாதளவுக்கு கையோடு கையாக இந்த கதையை ஆந்திராவிலிருக்கும் எழுத்தாளர் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் பதிவு செய்து வைத்துவிட்டார். அதுதான் இப்போது வசதியாக போச்சாம் அவருக்கு. நான் சொன்ன கதையை அப்படியே முருகதாசிடம் சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார் என்று விஜய் மீது புகார் கொடுத்திருக்கிறார் நரசிம்மராவ். அதற்கு ஆதாராமாக நண்பன் சமயத்திலேயே பதிவு செய்து வைத்திருந்த இந்த கதையையும் அதன் ஆதாரங்களையும் எடுத்து வைத்திருக்கிறாராம்.

விசாரணை நடந்து வருகிறது. பெரும் தொகை ஒன்றை நஷ்ட ஈடாக கொடுத்தாலொழிய கத்தியின் தெலுங்கு டப்பிங்குக்கு சிக்கல் என்கிறார்கள்.

மாப்பு…. வச்சுட்டானேடா ஆப்பு?

Read previous post:
Actress Meenakshi Photos

Close