விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர பிடிக்கலையா கீர்த்தி சுரேஷ்?

தேரை ஜோடிச்சு தெருவுக்கு கொண்டு வருவதற்குள் நங்கூரம் துரு புடிச்சு, நடு மண்டை வெடி வெடிச்சுரும் போலிருக்கேய்யா…! படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி… வேறு சிலர் உள்ளே வந்து… என்று பலவித நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது விஜய் சேதுபதியும் ஏ.எம்.ரத்னமும் இணையும் கூட்டணி. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த படத்தை அவரது விலகலுக்குப்பின் ரேணி குண்டா பன்னீர் செல்வம் இயக்கவிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் எப்படி இந்த படத்திலிருந்து நைசாக கழன்று கொண்டாரோ, அதைப்போலவே இதிலிருந்து நயன்தாராவும் கழன்று கொண்டார். போனால் போகட்டும் போடா மனநிலைக்கு வந்த ஏ.எம்.ரத்னம், மார்க்கெட்டில் பளபளவென ஜொலித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

படத்தின் கதையை கூட கேட்க தயாராக இல்லாத கீர்த்தி, ‘என் சம்பளம்’ இவ்வளவு என்று இரண்டு கைகளையும் முடிந்த மட்டும் அகலமாக்கி காட்டினாராம். தமிழ்சினிமா ஹீரோயின்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. தனக்கு பிடிக்காத ஹீரோக்களுடன் நடிக்க அழைத்தால், ‘‘தோள் பட்டையில வேல் கம்பு பட்ருச்சி. ஆறு மாசத்துக்கு புரண்டு கூட படுக்கக்கூடாது” என்றெல்லாம் உளறி வைக்காமல் நெஞ்சு வலி வருவது போல ஒரு சம்பளத்தை கேட்பார்கள். அப்புறம் என்ன? வந்தவர்கள் தானாகவே எடுப்பார்கள் ஓட்டம். கீர்த்தி கேட்ட சம்பளம், கிட்டதட்ட அப்படிதான் இருந்ததாம்.

ஊருக்கே பிடிக்கிற விஜய் சேதுபதியை உங்களுக்கு மட்டும் ஏன்ம்மா புடிக்கலை?

To listen audio Click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திடுக்! சிவா விஷயத்தில் குட்டையை குழப்பிய விநியோகஸ்தர்

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில்...

Close