கருத்து சுதந்திரத்தில் தலையிடுகிறார் குஷ்பு! தமிழ்சினிமா டைரக்டர் ஆவேசம்?
கருத்து… சுதந்திரம்… பேச்சுரிமை… ஆவேசம்… என்றாலே அது குஷ்புதான். அவரே கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக ஒரு டைரக்டர் புலம்பிக் கொண்டிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? மீடியாவின் பெரிய அதிர்ச்சியே இதுதான். சற்று முன் கிடைத்த தகவல் இது. அதற்கு சற்றுமுன்தான் அந்த கான்வர்சேஷன் நடந்ததாம். சென்னையிலிருந்து பெங்களுரில் இருக்கும் அந்த டைரக்டருக்கு போன் அடித்திருக்கிறார் குஷ்பு.
நீங்க எடுத்துகிட்டு இருக்கிற படத்தின் கதை, சசிதரூர், சுனந்தா பற்றிய கதையா? அப்படியென்றால், க்ளைமாக்சில் நீங்கள் சுனந்தாவின் மரணத்தை கொலை என்று முடிக்கிறீர்களா? தற்கொலை என்று முடிக்கிறீர்களா? இப்படி குஷ்பு கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டார் டைரக்டர். ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் கதை, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதருரின் கதை என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி டைரக்டரிடமே மீடியாக்கள் கேள்வி எழுப்பி வந்தன. அவர் பதில் சொல்லாமல் நழுவி வந்தார். இந்த நேரத்தில்தான் காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பிரமோஷன் ஆகியிருக்கும் குஷ்புவே இப்படியொரு கேள்வியை கேட்டால் அவர்தான் என்ன செய்வார்? அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார் டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ்.
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வேன். ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டேன். காங்கிரஸ் மேலிடம் டெல்லியிலிருந்து கேட்டால் சொல்கிறேன் என்று கூறி போனை கட் பண்ணிவிட்டாராம். இது குறித்து பெங்களூர் மீடியாக்களை சந்தித்து பேசவிருப்பதாகவும் தகவல் வருகிறது.
ரிலீஸ் நேரத்தில் காங்கிரஸ் போராட்டத்தில் குதிக்குமோ என்னவோ?