‘ இச் ’சுமி மேனனுக்கு வந்த சிக்கல்? சேறு குழைச்சு சிலை வடிப்பதற்குள், ஆறு தண்ணி ஆவியாகிடும் போலிருக்கே
விஷாலுக்கு லிப் கிஸ் அடித்து ஒரே நாளில் தனது கொள்கை கோட்பாடு எல்லாவற்றையும் எடைக்குப் போட்ட ‘இச்’சுமி மேனன், அதற்கப்புறம் இந்த தவறை ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சபதமே எடுத்துவிட்டார். ஏன்? கதை சொல்ல வரவும் போகவுமாக இருக்கும் டைரக்டர்கள் எல்லாரும், உதட்டை ஒரு மாதிரியாக குவித்தபடியே வந்து கதை சொல்வதால்தான் இந்த அஜீரண அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் லட்சுமி.
இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அவர் எடுத்த நேரத்தில், ‘இச்‘சுமியின் இமேஜை மீண்டும் ஒரு முறை மேலே உயர்த்த தயாராக இருந்தார் சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். தனது சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமிமேனனுக்கு கிடைத்த கேரக்டரை போல இன்னொரு கேரக்டரை அவரே தருவதாக கூறியிருந்தாராம் இவர் விரைவில் இயக்கவிருக்கும் புதுப்படத்தில்.
நடுவில் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தை இயக்கிய பிரபாகரன், மீண்டும் உதயநிதியை வைத்து இன்னொரு படத்தை துவங்குவதாக இருந்தாரல்லவா? அதில்தான் ‘இச்’சுமிக்கு இந்த பெருமையை தேடி தர துடித்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால், இவர் சொன்ன கதையில் இன்னும் முழு திருப்தி அடையாத உதயநிதி, ‘உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்… இன்னும் எதிர்பார்க்கிறேன்…’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க, கதை ஒரு முடிவுக்கு வந்தபாடில்லையாம். ‘எப்ப இந்த கதையை எடுக்கலாம்னு தோணுதோ, அப்போ எடுக்கலாம். அது வரைக்கும் கதையை தயார் செய்வதுதான் முக்கியம்’ என்று உதயநிதி தரப்பு தெளிவுபட தெரிவித்துவிட்டதால், லட்சுமிமேனன்தான் கவலைக்குள்ளாகியிருக்கிறாராம்.
பிரபாகரன் சேறு குழைச்சு சிலை வடிப்பதற்குள், ஆறு தண்ணி ஆவியாகிடும் போலிருக்கே என்பதுதான் அவரது கவலை. உதயநிதி படத்தில் நடித்து அது சீக்கிரம் வெளியே வந்தால், சம்பள தராசில் வெயிட் ஏற்றலாமே என்பது ‘இச்’சுமியின் நோக்கம். அதில்தான் இப்போது சொல்ல முடியாத தேக்கம்.
ஸ்கூப் நியூஸ்- எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே உதயநிதி விடை கொடுக்கக் கூடும் என்கிற கிசுகிசுப்பும் நிலவுகிறது.