லிங்கா- ரஜினியின் அச்சமும் சென்ட்டிமென்ட்டும்!

மத யானை வந்தால் மற்றதெல்லாம் தெறிச்சு ஓடுமே, அதுதான் ரஜினி படங்கள்! சூப்பர் ஸ்டார் படம் வர்றதால உங்க படங்களையெல்லாம் அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோச்சடையானுக்கே குபீர் ஏற்படுத்தினார்கள் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும். ரஜினியின் பொம்மைக்கே அவ்வளவு வேல்யூ என்றால் அவர் நேரடியாக நடித்த படங்களுக்கு என்னா மவுசு இருக்கும்?

ஆனால் ரஜினியை பொருத்தவரை இப்பவும் தனது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் ஒரு சின்ன டென்ஷன் தொற்றிக் கொள்ளுமாம். இந்த நிலையில் ரஜினியின் அடுத்த ரிலீஸ் லிங்கா. ஜெயலலிதா விஷயத்தில் கர்நாடகா மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். அதே போல கர்நாடகாவை விமர்சிக்கும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் சொல்லொணா சூட்டில் இருக்கிறது கன்னட வெறி கும்பல். இந்த நேரத்தில் காவிரி பிரச்சனையை லேசாக டச் பண்ணுகிற மாதிரி போகிறதாம் லிங்கா கதை. ரஜினி அந்த விஷயத்தில் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாகதான் ஸ்டெப் வைப்பார் என்றாலும், கருத்தை கருத்தா எடுத்துக்காம குருத்தை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற சமூக விரோதிகள் என்ன பண்ணுவார்களோ என்கிற அச்சமும் நிலவுகிறதாம் லிங்கா பொறுப்பாளர்களுக்கு.

இந்த பஞ்சாயத்தையெல்லாம் சற்றே மறந்துவிட்டு, தனக்கு எப்போதும் சென்ட்டிமென்ட்டான ஒரு விஷயத்தை செய்ய சொல்லியிருக்கிறார் ரஜினி. தனது படத்தில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியில் ஒரு பாடல் வைப்பார்கள் அல்லவா? அதுபோன்ற அறிமுக பாடலை தன் காந்த குரலால் எஸ்.பி.பி தான் பாடுவாராம் ரஜினிக்கு. இந்த முறையும் லிங்காவில் தனது அறிமுக பாடல் எஸ்.பி.பி.யால்தான் பாடப்பட வேண்டும் என்று விரும்பினாராம் ரஜினி.

அவரே சொல்லிவிட்ட பிறகு அப்பீல் என்ன? பாடிட்டாரு….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
100 கிராம் எக்ஸ்ட்ரா மூளையுடன் ஒரு ஹீரோ கம் இயக்குனர்!

சாமியார்களே ‘சைடு’ பிசினஸ்சாக சினிமாவில் இன்வெஸ்ட் பண்ணுகிற காலம் இது. மெய்ஞானிக்கு இருக்கிற ஆசை ஒரு விஞ்ஞானிக்கு இருக்காதா? அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்து வரும் ‘நாசா’வில்...

Close