ஹீரோ, ஹீரோயின் ரகசிய காதல்? விரைவில் டும் டும் டும்
ஒரு பிரபலமான இயக்குனரின் மகள் அவர். நடிகையும் கூட. தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்தவருக்கும் இவருக்கும் லவ். அவரும் பெரிய நடிகராகிவிட்டார். சமீபத்தில் வந்த அவரது படம் ‘ஊசிப்போன வடை, மறு நாள் கறிக்கு கூட ஆகாது’ என்கிற அளவுக்கு ஓடவே இல்லை. இருந்தாலும் மார்க்கெட்டில் ஒரு கோடி கேட்கிற அளவுக்கு ஸ்டிராங்காகதான் இருக்கிறார் இப்போதும்.
நடுவில் இவருக்கும் வேறொரு மலையாள நடிகைக்கும் லவ் என்று புரளி வந்தது. நல்லவேளை அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னாலும் ஒரு காதல் இவருக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதற்கும் அஞ்சலி செலுத்திவிட்டார் இந்த ஹீரோ. இவர் செலுத்தினாரா, அல்லது அவர் செலுத்தினாரா? பிரச்சனை அதுவல்ல.
இப்போது என்னவாம்? இயக்குனரின் மகளுக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறப் போகிறதாம். மிகவும் சைலன்ட்டாக பேச்சு வார்த்தையை துவங்கியிருக்கிறார்கள். மகளின் அப்பாவுக்கு டபுள் ஓ.கே. பிள்ளை வீட்டில்தான் ஒரே தொல்லை என்கிறார்கள்.
Jai/vijayalakshmi !