‘அரண்மனை ’ விவகாரம்… குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா?

அரசியல்தான் அப்படி என்றால் சினிமாவும் இப்படியா? குஷ்புவின் ட்விட் ஒன்று தயாரிப்பாளரை குறி வைத்து ‘டமால்’ ஏற்படுத்தியதால் இப்போது கோலிவுட்டிலும் பரபரப்பு. சுந்தர்சி யின் நாலெட்ஜ் இல்லாமலேயே அவர் இயக்கிய‘அரண்மனை’ படத்தின் ட்ரெய்லரை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டு விட்டார். இதனால் அப்செட் ஆன குஷ்பு, ‘சுந்தர்சி ரொம்ப அப்செட் ஆகிட்டாரு தெரியுமா? ஏன்தான் இப்படி செய்யுறாங்களோ?’ என்று கருத்து தெரிவிக்க, ‘தயாரிப்பாளரோட வலி அவருக்குதானேம்மா தெரியும்’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

முதலில் ஏழு கோடிக்கு இந்த படத்தை முடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்த சுந்தர்சி, முடியும் போது 12 கோடிக்கு கொண்டு வந்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, படத்தில் விமல், ஓவியா, ஹன்சிகா என்று ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தாராம். கடைசியில் பார்த்தால், வெறும் ஹன்சிகா மட்டும்தான் இருக்கிறார். சரி, போகட்டும்… பிரமோஷனை ஆரம்பிக்கலாம் என்று சுந்தர்சியை தொடர்பு கொள்ள நினைத்தால், லைனுக்கு வருவதேயில்லையாம்.

பொறுத்து பொறுத்து பார்த்துதான் இப்படி அதிரடி முடிவெடுத்தாராம் தயாரிப்பாளர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோ, ஹீரோயின் ரகசிய காதல்? விரைவில் டும் டும் டும்

ஒரு பிரபலமான இயக்குனரின் மகள் அவர். நடிகையும் கூட. தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்தவருக்கும் இவருக்கும் லவ். அவரும் பெரிய நடிகராகிவிட்டார். சமீபத்தில் வந்த அவரது...

Close