கோபம் காட்டிய விஜய் நடுநடுங்கிய அனிருத்?

‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்நேரம் நடந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் மட்டும் தயாராகி விட்டது. மிச்சமிருக்கிற பாடல்களை போட்டு தருவதற்குள் பேய்க்கு பிரசவம் பார்த்த நிலைக்கு ஆளாகிவிட்டாராம் அனிருத். முதலில் தரப்பட்ட அந்த மூன்று பாடல்களுமே சிவகார்த்திகேயனின் ‘டாணா’ படத்திற்காக போடப்பட்டது என்பதையும், ரிலாக்ஸ் மூடில் அதை விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் அனிருத் போட்டுக் காட்ட, ‘அதையே கொடுங்க. டாணாவுக்கு வேற கொடுங்க’ என்று அந்த மூன்றையும் இவர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்றும் நாம் முன்பே கூறியிருந்தோம். ஒரு வழியாக டாணாவை சமாளித்த அனிருத், அதற்கப்புறமும் விஜய்யையும் முருகதாசையும் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருவதுதான் மிச்ச சொச்ச ட்ராஜடி.

இவர் போட்டு அனுப்பும் ட்யூன்கள் எதிலும் திருப்தியாகவில்லையாம் விஜய். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அனிருத், அப்படியே கத்தி வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு டாணா படத்திற்கு ட்யூன் கம்போஸ் பண்ண உட்கார்ந்துவிட்டார். சில தினங்களாக அனிருத்திடமிருந்து ஒரு மெட்டும் வராமல் குழம்பிப் போன முருகதாஸ், அனிருத்தை தொடர்பு கொண்டால், ‘நான் பதினைஞ்சு நாள் அமெரிக்கா போறேன். போயிட்டு வந்துதான் உங்க வேலையை பார்க்கணும்’ என்று கூலாக சொல்ல, தகவல் விஜய்க்கு சொல்லப்பட்டது. கண்களில் பொறி பறந்ததாம் விஜய்க்கு. ‘என்ன நினைச்சுட்டு இருக்காரு அவரு? போனை போட்டுக் கொடுங்க’ என்றவர், லைனுக்கு வந்த அனிருத்தை பிடிபிடியென பிடித்தாராம்.

‘மீதி பாடல்களை முடிச்சுக் கொடுத்துட்டு நீங்க எங்க வேணா போங்க. அதுக்கு நடுவில அங்க இங்கன்னு கதை சொன்னீங்கன்னா…?’ என்று ஒரு ஸ்பேஸ் விட, அந்த ஸ்பேசுக்குள் இருக்கிற இடி மின்னல் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட அனிருத், ‘ங்ணா… இதோ உட்கார்ந்துச்சுங்ணா…’ என்று கூறிவிட்டு அந்த நிமிடம் கம்போசிங்கில் உட்கார்ந்தவர்தான். சோறு தண்ணியில்லாமல் ட்யூன்களாக போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

பாம்பு சீறலேன்னு பல்லை பிடிச்சு பார்க்கலாமோ அனிருத்?

2 Comments
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    //‘மீதி பாடல்களை முடிச்சுக் கொடுத்துட்டு நீங்க எங்க வேணா போங்க. அதுக்கு நடுவில அங்க இங்கன்னு கதை சொன்னீங்கன்னா…?’ என்று ஒரு ஸ்பேஸ் விட,//

    அந்த ஸ்பேசுக்குள் இருக்கிற “முறைப்போம், முடியலைன்னா காலைப்பிடிப்போம் என்ற தத்துவம் இருப்பதை” புரிந்து கொண்ட அனிருத்

  2. jeevz says

    அவனெல்லாம் வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்யிறான்? பாட்டு வா பாட்டு வா எண்டு பாட்டு படிச்சாலும் வருகுதில்லையே….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஷங்கரின் பர்த் டே பார்ட்டியில் விஜய்! கைவிடப்பட்ட எந்திரன் 2 EXCLUSIVE தகவல்கள்…

டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான்...

Close