பாம்பு கதை தெரியும். சட்டை கதை தெரியுமா? மனோபாலா மறுப்பு!

‘மாற்று அணிதான்! அதற்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வீர்கள் மனோபாலா?’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து நம்மை தொடர்பு கொண்ட மனோபாலா, “என்னிடம் ஒரு விளக்கம் கேட்டு அந்த செய்தியை வெளியிட்டிருக்கலாமே?’’ என்று முதலில் ஆதங்கப்பட்டார். அப்படியே தனது நியாயத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார். அது அப்படியே இங்கே-

“நான் விஷால் அணியில் இருக்கறதாலதான் அவங்க தயாரிக்கும் படத்தை முடிச்சு கொடுக்காமல் இழுத்தடிக்கறதா எழுதியிருக்கீங்க. நடந்தது என்னன்னு சொல்றேன். ஆரம்பத்தில் நான் விஷால் அணியில் இல்லை. நாங்கள்லாம் சேர்ந்து நிக்கிற ஒரு படத்தை பார்த்துட்டு அவங்களா நான் விஷால் அணியில் இருக்கிறதா நினைச்சுகிட்டாங்க. என்னை கூப்பிட்டு கொஞ்சம் கோபமாக கூட பேசினாங்க. சினிமாவுல எல்லாருமே என்னோட நண்பர்கள். எனக்கு எதிரிகளே கிடையாது. அதனால் ராதிகா என்னோட தோழிங்கறதால நான் பெரிசா எடுத்துக்கல. அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு விளக்கம் கொடுத்துட்டு வந்துட்டேன்”.

“சரத்குமார் சாரும், ராதாரவியண்ணனும் கூட அதை புரிஞ்சுகிட்டாங்க. ஆனால் ராதிகா புரிஞ்சுக்கலை. உடனே அவங்களுக்கு நான் முதல் பிரதி அடிப்படையில் எடுத்துகிட்டிருந்த ‘பாம்பு சட்டை’ படத்தின் பைலை குளோஸ் பண்ணிட்டாங்க. மூன்று கோடி ரூபாய் முதல் பிரதிங்கற அடிப்படையில்தான் அந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டேன். இரண்டு கோடி ரூபாய் மட்டும்தான் கொடுத்திருக்காங்க. மீதி பணத்தை கொடுக்கவேயில்லை. நடுவில் தனுஷ் அனிருத் ஆட்டத்துடன் ஒரு பாட்டு வேணும்னு சொன்னாங்க. நான் ஷுட்டிங் செலவை மட்டும் ஏத்துக்குறேன். அவங்க ரெண்டு பேருக்கும் சம்பளத்தை நீங்க கொடுத்துருங்கன்னு சொன்னேன். அதுக்கு சரின்னு சொன்னாங்க. அந்த ஒரு பாடல் மட்டும்தான் எடுக்கணும். மீதி படத்தை முடிச்சு ரெடியா வச்சுருக்கோம்”.

“இதுதான் நடந்தது. நானும் எவ்வளவு சொல்லியும் அவங்க நம்பாததால் விஷால் அணிக்கு வந்துட்டேன். அவங்க மீதி ஒரு கோடி ரூபாயை கொடுத்துட்டு படத்தை ரிலீஸ் பண்ணிக்கட்டும். தனுஷ் அனிருத் கால்ஷீட் வாங்கிக் கொடுத்தால் அந்த பாடலை எடுத்துக் கொடுக்க தயாராக இருக்கேன். மற்றபடி எனக்கும் ராதிகாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. இப்பவும் எப்பவும் ராதிகா என்னோட தோழிதான். அவங்ககிட்ட மட்டும் இல்ல. சினிமா இன்டஸ்ட்ரியில் எல்லாருக்கும் நான் இணக்கமா இருக்கதான் விரும்புறேன். எல்லாரும் என் நண்பர்கள்தான்”.

“நீங்க பாம்பு கதையை எழுதினீங்க. நான் சட்டை கதையை சொல்லிட்டேன். போதுமா?” என்றார் தனக்கேயுரிய நக்கலுடன்!

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    இது பிக்சட் ப்ரைஸ் பிராஜக்ட். அப்படின்னா ஸ்கோப் பிக்சட், டைம் பிக்சட், காஸ்ட் பிக்சட்தான். பிராஜக்ட் முடியறப்போ கஸ்டமர் கூட ஒரு ரெக்கொயர்மென்ட் சேர்த்தா எந்த ஒரு நல்ல பிராஜக்ட் மேனேஜரும் சேஞ்ச் ரெக்வெஸ்ட் ரெய்ஸ் பன்னத்தான் செய்வாங்க. அதுக்கு ஒத்துக்காம ஸ்கோப் க்ரீப் ஆச்சுன்னா காசு யாரு கொடுப்பா?

    ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட் தத்துவங்கள் புரியாம தத்துபித்துனு வேல செய்யறங்காட்டிதான் கோடம்பாக்கத்துல மொக்கையா படமெடுக்கறாங்க.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாற்று அணிதான்! அதற்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வீர்கள் மனோபாலா?

உடம்புதான் இப்புடி. ஆனா நரம்புல ஓடுறதெல்லாம் நரித்தந்திரம் என்று நாலு மாசத்துக்கு முன்னால் நீங்கள் மனோபாலாவை விமர்சித்திருந்தால், கெக்கேபிக்கே என்று சிரித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் இப்போது கேள்விப்படும்...

Close