மாற்று அணிதான்! அதற்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வீர்கள் மனோபாலா?

உடம்புதான் இப்புடி. ஆனா நரம்புல ஓடுறதெல்லாம் நரித்தந்திரம் என்று நாலு மாசத்துக்கு முன்னால் நீங்கள் மனோபாலாவை விமர்சித்திருந்தால், கெக்கேபிக்கே என்று சிரித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் இப்போது கேள்விப்படும் விஷயங்களை கேட்டால், நரிக்கே பாடம் சொன்ன நல்லாசிரியரே வருக… என்பீர்கள் மனோபாலாவிடம்!

பழம் தின்று கொட்டை போட்ட தயாரிப்பாளர்களே துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிக் கொண்டிருக்கிற கால கட்டத்தில், மிக சரியான ஒரு இயக்குனரை தேடிப்பிடித்து அறிமுகம் செய்து, தமிழ்சினிமாவையே புரட்டிப் போடுகிற ஹிட் படமான சதுரங்க வேட்டையை தயாரித்தவர் மனோபாலா. அவரது இத்தனை வருட கால திரை அனுபவம்தான் அந்த கதையை தேர்வு செய்தது என்று ஊரே கூடி நின்று பாராட்டியது. அதற்கப்புறம் அவர் தயாரித்து வரும் படம் பாம்புசட்டை. இதில் பாபிசிம்ஹாதான் ஹீரோ. படம் கிட்டதட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சிதான் மீதம். அதை எடுத்தால் ரிலீஸ் செய்கிற வேலையை பார்க்கலாம். ஆனால் மனேபாலாவின் நரம்பு மண்டலம் இங்குதான் விடைத்துக் கொண்டு நிற்கிறது. என்னவாம்?

இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும்படி மனோபாலாவுக்கு பணத்தை வழங்கியிருக்கிறது ராடர்ன் டி.வி. ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான நிறுவனம் இது. கிட்டதட்ட நாலரை கோடி ரூபாய் பட்ஜெட் பேசி அந்த பணமும் கைக்கு வந்துவிட்டதாம். அதில் பாதியை மட்டும்தான் இந்த படத்திற்கு செலவு செய்திருக்கிறாராம் மனோபாலா. இது அவர் சாமர்த்தியம். பிரச்சனையில்லை. இப்போது இந்த பாடல் காட்சியை எடுக்க வேண்டும் என்றால் இன்னும் பத்து லட்சம் வேண்டும் என்கிறாராம் ராடனிடம். நாலரை கோடியும் செலவாகிவிட்டது என்கிறது அவரது நரம்பு மண்டலம்.

சரத்குமாரும், விஷாலும் எதிரெதிர் அணியில் நின்று மோதுகிறார்கள். இதில் விஷால் அணியின் பக்கம் நிற்கிறார் மனோபாலா. அதனால்தான் படத்தை முடித்துக் கொடுக்காமல் தேவையில்லாமல் குடைச்சல் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பாம்பு சட்டை அந்தாயிருக்கு? பாம்பு யாரு… நீங்களா மனோபாலா?

Read previous post:
சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம் என்ன செய்ய வேண்டும் கமல்?

மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி....

Close