என்னது…கல்யாணம் பண்ணிக்கணுமா? உலக ஹீரோவின் மகளை ஒதுக்கித்தள்ளிய ஹீரோ(ஸ்)!
‘மரம் உனக்கு, நிழல் எனக்கு’ என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட இரண்டு ஹீரோக்கள் சொல்லி வைத்தார்போல ஒரே நேரத்தில் கழற்றி விட்டுவிட்டதால், அந்த வாரிசு நடிகை அப்செட்? பைப்பை திறந்த மாதிரி பக்கெட் பக்கெட்டாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் அவரை தேற்ற வழி தெரியாமல் தவித்து வருகிறது பிரண்ட்ஸ் வட்டாரம்.
கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் மிக மிக ரகசியமாக பேசப்படும் இந்த காதல் விவகாரம், “என்னிடம் ஆதாரம் இருக்கு. தாலி கட்றியா, இல்லையா?” என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாலும் போகலாம்! இது குறித்த மேல் விபரம் வருதமாறு-
அந்த வாரிசு நடிகையுடன், ஷுட்டிங்க்கு பல நாட்கள் கூட லேட்டாக வரும் அந்த இளம் நடிகர் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால் பார்ட்டிகளில் பொறி வைத்து பிடித்தார். இத்தனைக்கும் அந்த நடிகை அறிமுகம் ஆனதே, லேட் நடிகரின் நண்பரான ஸ்லிம் நடிகருடன்தான். பார்ட்டியில் பழகுவதற்கு முன்பு வரை ஸ்லிம் நடிகருடன் இணைப்பில் இருந்த வாரிசு, இவரை கண்டதும் தனது உடல் பொருள் ஆவி என அத்தனையையும் தாரை வார்க்க தயாரானார். நாட்கள் ஓடின. கிளிகள் பறக்காத இடம் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் “என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” என்று தனக்கேயுரிய ஆண் குரலில் அந்த நடிகை கேட்க, “யோவ்… என்னய்யா காமெடியெல்லாம் பண்றே?” என்று அதையும் ஜோக்காக்க முயற்சித்தாராம் லேட் ஹீரோ.
அதற்கப்புறம் வாரிசு நடிகையின் போனை அவர் எடுப்பதே இல்லை. திடீரென இவர் ஒதுங்கி ஒதுங்கிப் போக, விரக்தியின் உச்சத்திற்கே போனாராம் நடிகை. தனது பழைய தோழனிடம் பஞ்சாயத்துக்கு சென்றால், அவரும் இவரை அலட்சியம் செய்தாராம். இருந்தாலும், அவனை மேரேஜ் பண்றதுதான் என்னோட லட்சியம் என்று இவர் சுற்றி சுற்றி வர, லேட் ஹீரோவின் வீட்டில் படு டென்ஷன். சீக்கிரம் ஒரு பொண்ணு பார்த்து கால் கட்டு போட்டுவிடணும் என்று நாலாபுறமும் பெண் பார்த்து வருகிறார்கள்.
ம்… தலைவலிய மண்டையில ஏத்திக்கறதுக்கு இவ்ளோ போராட்டம் தேவையாம்மா?
To listen Audio Click below:-
https://youtu.be/bMbqzbrRsCk
sruthi ok
hero yaaru