இது ‘ஆன்ட்டீஸ் ’ பார்க்! துள்ளப் போகும் இளம் ஹீரோ யார்?

ஒரு காலத்தில் சிம்ரன் கால்ஷீட் கிடைத்தால் அது வரம். கமல், விஜய், அஜீத் என்று எப்போதும் டாப் கியரில் இருந்தது அவரது வேகம். அவருக்கு கொஞ்சமும் குறையாமல் டஃப் கொடுத்தார் மீனா. அவரும் தன் பங்குக்கு கொடுத்த ஹிட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைய ஹீரோயின்கள் போல அந்த காலத்தில் பாலிடிக்ஸ் பண்ணாமல் பகிர்ந்து நடித்த இந்த ஹீரோயின்கள், இப்போது சேர்ந்து நடித்தால்? பழங்கதை பேசி பேசியே காலம் ஓடிவிடும். நடுவில் ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து கொண்டால்? ஷுட்டிங் ஸ்பாட் பிக்னிக் ஸ்பாட் ஆக வேண்டியதுதான்.

யெஸ்… மூவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்.

சிம்ரனிடம், அந்த இன்னொரு கேரக்டர்ல மீனா நடிக்கிறாங்க என்றாராம் இயக்குனர். ஓ… கிரேட். எப்ப வேணும்னாலும், எத்தனை நாள் வேணும்னாலும் நான் ரெடி என்றாராம் சிம்ரன். மீனாவிடம் இதை சொன்னப்போதும், சிம்ரனா… ஹையா ஜாலி என்றாராம். இவ்விருவரின் பெயரை கேட்டதும் செம குஷியானாராம் ரம்யா கிருஷ்ணன். இப்படி சேர்ந்து நடிக்கிற சம்பவத்தை திருவிழா போல கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் மூவரும்.

இவர்கள் சேர்ந்து நடிக்கிற படம் எது? படத்தின் ஹீரோ யார் ? என்பதையெல்லாம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் பழைய நடிகைகளை பார்த்து பார்த்தே உறக்கம் தொலைக்கும் எபவ் ஃபிப்டிகளுக்கு இந்த தகவல் லட்டுதானே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷின் டென்ஷனை குறைத்த சிவகார்த்திகேயன்!

படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு...

Close