தனுஷின் டென்ஷனை குறைத்த சிவகார்த்திகேயன்!

படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு படங்கள் மட்டுமல்ல, தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் கூடதான். இத்தனைக்கும் அவரே தயாரித்து நடித்திருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரெய்லர், வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலிலேயே லட்சக்கணக்கான யூ ட்யூப் பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்டிருக்கிறது. விமசர்னமும் ஆஹா… ஓஹோதான். அப்படியிருந்தும் அந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அஞ்சி வருகிறார்கள்.

காரணம், தனுஷின் சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை. கைக்கு பர்னால் தேடுவதை விட, கதவுக்கு தாழ்பாள் போடுவதே உத்தமம் என்ற முடிவுக்கு வந்தவர்கள், தனுஷின் இந்த படத்தின் வியாபாரத்திற்கு இறுக்கி ஒரு பூட்டு போட ட்ரை பண்ணியதை திரையுலகம் நன்கறியும். அப்படியிருந்தும் சில விநியோகஸ்தர்கள், நீங்க தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படத்தை தர்றதுன்னா இதை வாங்குறோம் என்று கோக்கு மாக்கு காட்ட நொந்தே போனார் தனுஷ்.

இந்த விஷயத்தையெல்லாம் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், வலிய வந்து தனுஷுக்கு உதவினாராம். எப்படி? தனது ஆஸ்தான நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்திடம் கூறி வேலையில்லா பட்டதாரியை வாங்க வைத்திருக்கிறாராம். நல்ல விலை கொடுத்து இந்த படத்தை வாங்கி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுவதாக கூறப்படுகிறது. அப்படி நடக்கும் என்றால், சிவகார்த்தியேனின் பூ மனசுக்கு ஓரு ஓ… போட்ற வேண்டியதுதான்!

Read previous post:
என்னது… நான் முதலமைச்சரா? வடிவேலுவை அலற விட்ட கதை!

ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ... என்று மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. கடைசியாக அவர் இறங்கி களம் கண்ட தெனாலிராமன், பலம் கொண்ட மட்டும் வழுக்கியதால், அண்ணே...

Close