அறிமுகமாகும்போதே ஆக்ஷன் இமேஜ்? வர்றாரு ஒரு வலுவான ஹீரோ!
அறிமுகமாகும்போதே கொஞ்சம் ஆக்ஷன், மற்றும் கடுகடு பேஸ்கட்டோடு களம் இறங்கிவிட்டால், சிறிது நாளிலேயே ஆக்ஷன் சப்ஜெக்டோடு கதவை தட்டுவார்கள் இயக்குனர்கள். அப்படியொரு அதிர்ஷ்டம் ‘மெட்ரோ’ படத்தின் அறிமுக ஹீரோ சிரிஷ்-க்கு கிடைத்திருக்கிறது. லயோலா காலேஜில் விஸ்காம் படித்த சிரிஷ், பார்க்கவும் பேசவும் ‘காம்’ ஆகதான் இருக்கிறார். ஆனால் ஸ்கிரினில் பார்த்தால், நமக்கு உதறலெடுக்கும் போலிருக்கிறது. “படத்தில் எனக்கு ஒரேயொரு ஆக்ஷன் பிளாக்தான். ஆனால் படம் முழுக்க அப்படியொரு மூட் இருந்துகிட்டே இருக்கும்” என்றார்.
வசதியான குடும்பம், வலுவான பின்னணி என்று இவரது ‘வரலாறு’ சற்று பயங்கரமாக இருந்தாலும், ‘‘நான் எப்பவும் டைரக்டரோட களிமண்ணுதான் சார். வேணுங்கிறபடி உருவாக்கிக்கலாம்” என்று பவ்யம் காட்டுகிறார். “ஒரு டைரக்டர் நினைச்சா மட்டும்தான் ஒரு சாதாரண ஆளையும் மின்னலா ஒளிர வைக்க முடியும். எனக்கு கிடைத்த டைரக்டர் என்னை அப்படியாக்குவார்னு நம்புறேன். ஏன்னா படத்தை பார்த்துட்டேன். அப்பயொரு கரண்ட் இருக்கு அதில்” என்றார்.
ஆமாம்.. யாருங்க அந்த பொல்லாத டைரக்டரு?
விதார்த் நடித்த ‘ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன்தான்!
“அவரு ஆடிஷன் பண்ணுறாருன்னு கேள்விப்பட்டேன். போய் நடிச்சு காண்பிச்சேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. அதற்கப்புறம்தான் எங்கப்பாவை சந்திச்சு பேசினார் அவர். எல்லாம் நல்லபடியா நடந்து இன்னைக்கு முழு படமும் ரெடியாகிருச்சு. இன்னும் சில வாரங்களில் ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்கோம். படத்தின் ட்ரெய்லரை இயக்குனர் பாரதிராஜா, விஜய் சேதுபதி, சிம்புன்னு நிறைய பேர்ட்ட காட்டுனோம். எல்லாரும் ஆஹான்னு சொல்லியிருக்காங்க. குறிப்பா என்னையும் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருக்காங்க. சிம்பு என்னோட நண்பர்ங்கறதால நிறைய டிப்ஸ்சும் கொடுத்தார். முழு படமும் அவங்க நம்பிக்கையை காப்பாத்தும்” என்றார் சிரிஷ்.
“லயோலாவுல நான் படிக்கும் போது என்னோட குளோஸ் பிரண்ட்டா இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் மகன் சண்முகபாண்டியன்” என்றொரு முக்கியமான தகவலையும் மறக்காமல் சொன்னார் சிரிஷ். படத்துல அந்தரத்துல பறந்து பின்னங் காலால் உதைக்கிற காட்சி இருக்கான்னு தெரியல!
எதுக்கும் உஷாரா பார்க்கணும்…
//என்னோட குளோஸ் பிரண்ட்டா இருந்தவர் //
இப்ப இல்லையா?
// படத்தின் ட்ரெய்லரை இயக்குனர் பாரதிராஜா, விஜய் சேதுபதி, சிம்புன்னு நிறைய பேர்ட்ட காட்டுனோம். எல்லாரும் ஆஹான்னு சொல்லியிருக்காங்க. //
அன்னிக்கு கவுண்டர் சொன்னாரு, ஏப்பா, விழாவுக்கு கூப்புட்டா வந்து படம் நல்லால்லைன்னா சொல்லப் போறாங்க?