இன்னும் திரிஷாவும் நயன்தாராவும் பார்க்கல! ஜி.வி.பிரகாஷ் படத்தால் 10 கோடி ஜம்ப்
ஊரே ஒன்று சேர்ந்து கழுவி ஊற்றுவதற்கு ஒரு படம் ரெடியான பின்பும், ஜிவிபிரகாஷ் தப்பித்து வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியுலகத்தில் நடமாடுகிறார் என்றால், அந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவாக இருக்கும் என்று கணித்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்சினிமாவின் உட்சபட்ச ஏ படம் என்கிற அந்தஸ்தை முதல் காட்சியிலேயே பெற்றுவிட்டபடியால், இளசுகளின் கூட்டம் திமிறிக் கொண்டு நிற்கிறது தியேட்டர்களில். கூச்சலும் கும்மாளமுமாக படம் பார்க்கும் அவர்கள், குடும்பத்தோடு அந்த பக்கம் வருவார்களா என்கிற சந்தேகத்தை அவர்களின் சந்தேகமில்லாத ஆரவாரம் காட்டிக் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக இந்த வாரம் மேலும் 50 தியேட்டர்களில் காட்சியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். படம் க்ளீன் ஏ என்பதால் கலெக்ஷனில் 30 சதவீதம் கவர்மென்ட்டுக்கு போய்விடும்.
அப்படியிருந்தும் இந்த படம் தயாரிப்பாளருக்கு பத்து கோடி வரை லாபம் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாக பேசப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான ‘பென்சில்’ நின்று போயிருந்ததல்லவா? அதை இப்போது ஆளாளுக்கு விலை பேசுகிறார்களாம். தயாரிப்பாளர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் பெட்டியில் அரைகுறையாக முடங்கிக் கிடக்கும் அந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் திடீர் மார்க்கெட், ஜிவிபிரகாஷ்ஷை பர்மனென்ட் கெட்ட பையனாகவே ஆக்கிவிடும் போலிருக்கிறது.
அப்படியே இன்னொரு இன்ட்ரஸ்ட்டிங்கான செய்தி. படத்தின் தலைப்பில் த்ரிஷாவும் நயன்தாராவும் இருக்கிறார்கள் அல்லவா? அதில் த்ரிஷாவை மட்டும் ஒரு நிருபர் தொடர்பு கொண்டாராம். “உங்க பேரை தலைப்பா வச்சுருக்கிற படத்தை பார்தீங்களா?” என்று கேட்டு முடிப்பதற்குள், பார்க்கலையே? என்றாராம் த்ரிஷா. அவரது குரலில் வழிந்த வெட்கத்தை புரிந்து கொண்டார் நிருபர்.
ஆனால் தன் வீட்டிலேயே இருக்கிற ஹைடெக் ஹோம் தியேட்டரில் அவர் படம் பார்த்து வெகுவாக ரசித்ததாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ? ஜிவிபிரகாஷ் என்ற கெட்டப்பையன் கால்ஷீட் கேட்டால், கைநிறைய அள்ளிக் கொடுக்க தயாராக இருப்பார் த்ரிஷா என்பதுதான் பலரது யூகம்!
**எது எப்படியோ? ஜிவிபிரகாஷ் என்ற கெட்டப்பையன் கால்ஷீட் கேட்டால், கைநிறைய அள்ளிக் கொடுக்க தயாராக இருப்பார் த்ரிஷா என்பதுதான் பலரது யூகம்!**
அக்காவா நடிக்கறதுக்கா?